'கிரிப்டோகரன்சி'க்கு தடை? பிரதமர் மோடி ஆய்வு!

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :பண மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு உதவும் என்பதால், 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாட்டுக்கு தடை விதிப்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.பணம் இல்லாத பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பிட்காயின் உட்பட பல மெய்நிகர் பணம் புழக்கத்தில் உள்ளன.இந்த
'கிரிப்டோகரன்சி,தடை? பிரதமர் மோடி, ஆய்வு

புதுடில்லி :பண மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு உதவும் என்பதால், 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாட்டுக்கு தடை விதிப்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.

பணம் இல்லாத பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பிட்காயின் உட்பட பல மெய்நிகர் பணம் புழக்கத்தில் உள்ளன.இந்த மெய்நிகர் நாணயப் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை, கடந்தாண்டு மார்ச் மாதம் நிராகரித்தது. இதையடுத்து டிஜிட்டல் வடிவிலான புதிய கரன்சியை தானே அறிமுகம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில் இந்தப் பிரச்னை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று (நவ.13) ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக, அரசு உயரதிகாரிகள்கூறியுள்ளதாவது:

கிரிப்டோகரன்சி தொடர்பாக ரிசர்வ் வங்கி, மத்திய உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவை தனித்தனியாக ஆலோசனைகளை நடத்திஉள்ளன. பல்வேறு நாடுகளில் உள்ள நடைமுறைகள், அதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத இந்த கரன்சி பயன்பாட்டில் உள்ள ஆபத்து குறித்து விவாதிக்கப்பட்டது. கட்டுப்பாடு எதுவும் இல்லாத இந்த சந்தை, பண மோசடி செய்வதற்கும், பயங்கரவாத சம்பவங்களுக்கும்உதவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு தடை விதிக்க அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.பொய் வாக்குறுதிகள் அளித்து மக்களை இதில் முதலீடு செய்ய ஈர்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்த முதலில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RK -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-202109:43:12 IST Report Abuse
RK கிரிப்டோ கரன்சியை தடை செய்யாமல் நாட்டிற்கு வருமானம் தரும் தளமாக மாற்ற வேண்டும். இதில் மக்களை ஏமாற்றும் தரகர்களை களை எடுக்க வேண்டும். உண்மையில் வங்கியின் துணையுடனும் தரவுகள் சரிபார்த்த பின்பே வர்த்தகம் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்து கொண்டு தொழில் நுட்ப துரையின் வளர்ச்சியினை புரிந்து கொண்டு நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு நடைமுறை படுத்த வேண்டும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-நவ-202114:17:54 IST Report Abuse
pradeesh parthasarathyமோடி அவர்களே இதை முதலில் தடை செய்யுங்கள் ... உங்க ஆளுங்களுக்கு நீங்கள் செய்யும் மிக பேருதவியக இது அமையும் .......
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-நவ-202114:18:53 IST Report Abuse
pradeesh parthasarathyமற்றொரு ஈமு கோழி வளர்ப்பு தான் இது .......
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
14-நவ-202109:02:54 IST Report Abuse
R S BALA இத நம்பி உலகத்துல பல பேரு இருக்காய்ங்க போல ..
Rate this:
Cancel
Sasi Kumar -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-202108:06:43 IST Report Abuse
Sasi Kumar Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X