பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டின் சுவர் விழுந்து ஒருவர் சாவு: 4 பேர் காயம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
நெய்வேலி : நெய்வேலி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் லாரி டிரைவர் இறந்தார். படுகாயமடைந்த 4 பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நெய்வேலி அடுத்த வடக்கு மேலுார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 45; லாரி டிரைவர். இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தனது தந்தை பச்சைமுத்து, 70; தாய் கல்யாணி, 65; மனைவி வளர்மதி, 39; மகள் ஈஸ்வரி, 20; ஆகியோருடன்

நெய்வேலி : நெய்வேலி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் லாரி டிரைவர் இறந்தார். படுகாயமடைந்த 4 பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெய்வேலி அடுத்த வடக்கு மேலுார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 45; லாரி டிரைவர். இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தனது தந்தை பச்சைமுத்து, 70; தாய் கல்யாணி, 65; மனைவி வளர்மதி, 39; மகள் ஈஸ்வரி, 20; ஆகியோருடன் துாங்கினார். கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வலுவிழந்த சுவர் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி சந்தோஷ்குமார் இறந்தார்.

காயமடைந்த பச்சைமுத்து, கல்யாணி, வளர்மதி, ஈஸ்வரி ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார். விபத்து குறித்து தகவலறிந்த சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் நிவாரண உதவி வழங்கி, அரசு சார்பில் உதவிகள் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் ஆறுதல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X