பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்புகளில் புகுந்த 35 பாம்புகள் பிடிபட்டன

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில் குடியிருப்பு உட்பட பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த 35 பாம்புகளை பிடித்த வனத்துறையினர், அவற்றை வனப்பகுதியில் விட்டனர்.மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காலிமனைகள், பாழடைந்த கட்டடங்கள், பழைய வாகனங்கள் பாம்புகளின் புகலிடமாக இருக்கும்.சமீபத்தில் கொட்டித் தீர்த்த பெருமழையால், பல்வேறு பகுதிகளில் இருந்து குடியிருப்புகளுக்குள் பாம்புகள் படையெடுத்தன.

சென்னை : சென்னையில் குடியிருப்பு உட்பட பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த 35 பாம்புகளை பிடித்த வனத்துறையினர், அவற்றை வனப்பகுதியில் விட்டனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காலிமனைகள், பாழடைந்த கட்டடங்கள், பழைய வாகனங்கள் பாம்புகளின் புகலிடமாக இருக்கும்.சமீபத்தில் கொட்டித் தீர்த்த பெருமழையால், பல்வேறு பகுதிகளில் இருந்து குடியிருப்புகளுக்குள் பாம்புகள் படையெடுத்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை முழுதும் பாம்பு பிடிக்க தனிப்பயிற்சி பெற்ற வனச்சரக ஊழியர்கள் குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.

இதில், 13 நல்ல பாம்புகள், 7 சாரைப்பாம்புகள், 12 தண்ணீர் பாம்புகள், இரண்டு மண்ணுளி பாம்புகள் மற்றும் ஒரு கொம்பேரி மூக்கன் என, 35 பாம்புகள் பிடிபட்டன.சென்னை வனச்சரக அலுவலகம் பள்ளத்தில் இருப்பதால், பிடித்த பாம்புகளை பாதுகாக்க முடியாமல் வனத்துறை சிரமப்பட்டது. பிடித்த பாம்புகளை வாகனத்திலேயே வைத்திருந்து, மாம்பாக்கம், திருப்போரூர் வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X