ரூ.5.9 கோடி 'ஆட்டை' மோசடி பேர்வழி கைது

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை, : தனியார் நிறுவனத்தில் முதலீடு என்ற பெயரில் 5.9 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது அர்சத், 51. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 37. இவர், 'எவர்ஸ்டோன் மினரல்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி

சென்னை, : தனியார் நிறுவனத்தில் முதலீடு என்ற பெயரில் 5.9 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது அர்சத், 51. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:

சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 37. இவர், 'எவர்ஸ்டோன் மினரல்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார்.இந்நிறுவனம் சார்பில், விலை உயர்ந்த 'குவார்ட்ஸ்' கற்களை, தமிழகம், ஆந்திராவில் விலைக்கு வாங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, 14 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் பெற்றதாக என்னிடம் கூறினார்.

இதற்கான முதலீடு பணம் இல்லாததால், என்னிடம் முதலீடு செய்வதில் கிடைக்கும் லாபத்துடன், முதலீடு பணத்தையும் திருப்பி தருவதாக கூறியதன்படி, பல தவணைகளாக, 5.9 கோடி ரூபாயை, பன்னீர்செல்வத்துக்கு வழங்கினேன்.ஆனால், பணத்தை பெற்றபின் ஏமாற்றினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில், பன்னீர்செல்வம் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது.இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X