பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு நன்றி தாம்பிராஸ் கூட்டத்தில் தீர்மானம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : 100 கோடிக்கு மேலாக இலவசமாக தடுப்பூசி செலுத்தி, இந்தியாவில் கொரோனா பாதிப்பை வெகுவாக குறைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, தாம்பிராஸ் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடலுார் மாவட்ட தாம்பிராஸ் பொதுக்குழு கூட்டம், விருத்தாசலம் வேதபாராயண மடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர்
 பிரதமர் மோடிக்கு நன்றி தாம்பிராஸ் கூட்டத்தில் தீர்மானம்

விருத்தாசலம் : 100 கோடிக்கு மேலாக இலவசமாக தடுப்பூசி செலுத்தி, இந்தியாவில் கொரோனா பாதிப்பை வெகுவாக குறைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, தாம்பிராஸ் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலுார் மாவட்ட தாம்பிராஸ் பொதுக்குழு கூட்டம், விருத்தாசலம் வேதபாராயண மடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா இறைவணக்கம் வாசித்தார். மாவட்ட ஆலோசகர் சுந்தரேசன் வேதகோஷம் கூறினார். மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.

மாநில செயலாளர் திருமலை, கிளை தலைவர்கள் ராஜாராமன், வரதராஜன், வெங்கடேசன், விருத்தகிரி, ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன், பொருளாளர்கள் முரளி, விருத்தகிரி, ஸ்ரீமுஷ்ணம் கிளை மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், 2020 - 21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அனைத்து கிளை பொறுப்பாளர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட பொருளாளர் விருத்தகிரி நன்றி கூறினார்.கூட்டத்தில், 100 கோடிக்கும் மேலாக இலவசமாக தடுப்பூசி செலுத்தி, இந்தியாவில் கொரோனா பாதிப்பை வெகுவாக குறைத்த பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது. தமிழகத்திலும் முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X