பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளை துார்வார முதல்வருக்கு மனு 

Added : நவ 13, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நீர் நிலைகளை துார்வார வேண்டுமென, விவசாயிகள் சங்கம் மனு அளித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:கன மழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் சுவர் இடிந்து இறந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நீர் நிலைகளை துார்வார வேண்டுமென, விவசாயிகள் சங்கம் மனு அளித்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:கன மழை காரணமாக கடலுார் மாவட்டத்தில் சுவர் இடிந்து இறந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மாவட்டம் முழுதும் சாலைகள் சேதமடைந்துள்ளன. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம், குறிஞ்சிப்பாடி, விருத்தாலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பத்தில் 50 ஆயிரம் எக்டர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். நீர் நிலைகளை துார்வார வேண்டும். கரும்புக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X