பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு சிறுதொழில் கடன் கூட்டுறவு இணைப் பதிவாளர் தகவல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கடலுார் : கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், சிறுதொழில் கடன் பெற அணுகலாம் என, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் தீலிப்குமார் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: தமிழக சட்டசபையில், 2021- - -2022ம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட

கடலுார் : கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், சிறுதொழில் கடன் பெற அணுகலாம் என, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் தீலிப்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: தமிழக சட்டசபையில், 2021- - -2022ம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீதம் குறைந்த வட்டியில் சிறுவணிகம் செய்வதற்காக, ரூ. 5,000 முதல் ரூ.25 ஆயிரம் வரையில் கடன் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 31 கிளைகள் மூலம் 5 சதவீத குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X