பொது செய்தி

தமிழ்நாடு

பொதுப்பணித்துறை கண்மாய்களில் 197ல் 25 சதவீதத்திற்கும் குறைவாக நீர்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 992 கண்மாய்களில் 197ல் 25 சதவீதத்திற்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதில் பொதுப்பணித்துறையினர்சார்பில் 992 கண்மாய்கள்பராமரிப்பு செய்யப்படுகின்றன. இதில் கால்வாய் பாசன கண்மாய்களும், பாசனம் இல்லாத கண்மாய்களும் உள்ளன. 92 கண்மாய்கள்

சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 992 கண்மாய்களில் 197ல் 25 சதவீதத்திற்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதில் பொதுப்பணித்துறையினர்சார்பில் 992 கண்மாய்கள்பராமரிப்பு செய்யப்படுகின்றன. இதில் கால்வாய் பாசன கண்மாய்களும், பாசனம் இல்லாத கண்மாய்களும் உள்ளன. 92 கண்மாய்கள் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.75 முதல் 99 சதவீதம் 177 கண்மாய்களிலும், 51 முதல் 75 சதவீதம் வரை 167 கண்மாய்களிலும், 26 முதல் 50 சதவீதம் வரையில் 359 கண்மாய்களில் நீர் இருப்பு உள்ளது. 25 சதவீதத்திற்கும் குறைவாக 197 கண்மாய்களில் நீர் இருப்பு உள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் சிவகங்கை மாவட்டத்திற்கு இயல்பான மழையளவு கிடைத்துள்ளது. அதிகளவு மழை பொழிவு இல்லை. இதன் காரணமாக பாதி கண்மாய்களில் 50 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கனமழை பெய்தால் மட்டுமே அனைத்து கண்மாய்களும் நிரம்பும் வாய்ப்புள்ளது, என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X