பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த போலீசாரின் குடும்பத்துக்கு நிதியுதவி

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை : பணியின்போது உயிரிழந்த ஒன்பது போலீசாரின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிதியுதவி வழங்கினார்.தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள், உடல்நல குறைவு மற்றும் சாலை விபத்தில் படுகாயமடைந்தால், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.அதன்படி, முத்தியால்பேட்டை

சென்னை : பணியின்போது உயிரிழந்த ஒன்பது போலீசாரின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிதியுதவி வழங்கினார்.

தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள், உடல்நல குறைவு மற்றும் சாலை விபத்தில் படுகாயமடைந்தால், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.அதன்படி, முத்தியால்பேட்டை தலைமை காவலர் கவிதா, தலைமை செயலகத்தில் பணியில் இருந்தபோது, மழையின் காரணமாக வேரோடு சரிந்த மரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார். அருகில் இருந்த மற்றொரு காவலர் முருகன் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதில், உயிரிழந்த கவிதாவின் குடும்பத்தினருக்கு, 25 லட்சம் ரூபாய்; படுகாயமடைந்த முருகனின் குடும்பத்தினருக்கு, 5 லட்சம் ரூபாயை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வழங்கினார்.அதேபோல், உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்த எட்டு, போலீசாரின் குடும்பத்திற்கு தலா, 3 லட்சம் ரூபாய் என, 54 லட்சம் ரூபாய் வழங்கினார்.மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 27 போலீசாருக்கு, மருத்துவ உதவி தொகையாக, 32.93 லட்சம் ரூபாய் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X