நிலவேம்பு, கபசுர குடிநீர் வீடுகள்தோறும் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு, கபசுர குடிநீர் வீடுகள்தோறும் வினியோகம்

Added : நவ 13, 2021
Share
அனகாபுத்துார் : அனகாபுத்துாரில் தொற்று நோய் பரவலை தடுக்க, வீடுகள்தோறும் நிலவேம்பு, கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தொடர் மழையால், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்துாரில் பாரி, பாலாஜி, அண்ணா, சாந்தி, திரு, வெங்கடேஷ்வரா, குருசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை சற்று ஓய்ந்ததையடுத்து, கடந்த இரு நாட்களாக மழை நீர் வடியத்

அனகாபுத்துார் : அனகாபுத்துாரில் தொற்று நோய் பரவலை தடுக்க, வீடுகள்தோறும் நிலவேம்பு, கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தொடர் மழையால், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்துாரில் பாரி, பாலாஜி, அண்ணா, சாந்தி, திரு, வெங்கடேஷ்வரா, குருசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை சற்று ஓய்ந்ததையடுத்து, கடந்த இரு நாட்களாக மழை நீர் வடியத் துவங்கியுள்ளது.

அதேநேரத்தில், மழைநீருடன் கழிவு நீர் தேங்கியதால் பல இடங்களில், தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர், சைக்கிளில் எடுத்து செல்லப்பட்டு, வீடுகள் தோறும் வழங்கப்படுகிறது.அதேபோல், தெருக்கள் தோறும் கொசு புகை அடிக்கப்படுகிறது. தொற்று நோய் பரவாமல் இருக்க, 'தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்' என, ஆட்டோ மூலம் அனைத்து தெருக்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X