பொது செய்தி

தமிழ்நாடு

மாநில பாரம்பரிய நெல் போட்டிக்கு ஒற்றை நாற்று நடவு முறை சாகுபடி

Added : நவ 13, 2021
Share
Advertisement
காரைக்குடி--காரைக்குடி அருகேயுள்ள ஓ.சிறுவயலைச் சேர்ந்த கட்டட பொறியாளர், மாநில பாரம்பரிய நெல் அறுவடை போட்டியில் பங்கேற்று ஒற்றை நாற்று நடவு முறையில் அசத்தி வருகிறார்.ஓ.சிறுவயலைச் சேர்ந்தவர் முகேஷ்கண்ணன் 27. சென்னையில் கட்டட பொறியாளராக வேலை செய்து வந்தவர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் 4 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.தற்போது 5

காரைக்குடி--காரைக்குடி அருகேயுள்ள ஓ.சிறுவயலைச் சேர்ந்த கட்டட பொறியாளர், மாநில பாரம்பரிய நெல் அறுவடை போட்டியில் பங்கேற்று ஒற்றை நாற்று நடவு முறையில் அசத்தி வருகிறார்.ஓ.சிறுவயலைச் சேர்ந்தவர் முகேஷ்கண்ணன் 27. சென்னையில் கட்டட பொறியாளராக வேலை செய்து வந்தவர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் 4 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.தற்போது 5 ஏக்கரில், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, பாரம்பரிய நெல் ரகங்களான மிளகுசம்பா, கருப்புக்கவுனி, செம்புலி சம்பா, அறுபதாம் குறுவை, கருத்தக்கார், கல்லுருண்டை, சின்னார், சீரகசம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார்.தற்போது வேளாண்துறை அறிவித்துள்ள பாரம்பரிய நெல் அறுவடை போட்டியிலும் பங்கேற்க 50 சென்ட் நிலத்தில் மிளகு சம்பா சாகுபடி செய்துள்ளார்.முகேஷ் கண்ணன் கூறுகையில், நம்மாழ்வார் மீது கொண்ட பற்று காரணமாக இயற்கை விவசாயத்தை தேர்வு செய்தேன். இளைஞர்கள்விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். மாநில அளவில் நடக்கும் பாரம்பரிய நெல் அறுவடை போட்டிக்கு சாக்கோட்டை வேளாண்துறை அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். 50 சென்ட் நிலத்தில் மிளகு சம்பா நெல் ரகத்தை ஒற்றை நாற்று நடவு முறையில் சாகுபடி செய்துஉள்ளேன். ஒற்றை நாற்று நடவு முறையில் குறைந்த விதை நெல் மூலம் அதிக விளைச்சலை பெற முடியும். விளைச்சலை நமது மாவட்ட மற்றும் பிற மாவட்ட அதிகாரிகள்வந்து மதிப்பீடு செய்வர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில்நடைபெறும் இப்போட்டியில் அதிக விளைச்சலை கொடுத்து முன் மாதிரியாக திகழ வேண்டும் என்பதே ஆசை. இதன் மூலம் பல இயற்கை விவசாயிகளை உருவாக்க முடியும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X