போலீஸ் செய்திகள்| Dinamalar

போலீஸ் செய்திகள்

Added : நவ 13, 2021
Share
கோர்ட்டில் ஆஜர் ஆகாதவர் மீது வழக்குசிவகங்கை: காரைக்குடி அருகே கோட்டையூர் காளிமுத்து 50. இவர் பெட்டிக்கடையில் மதுபானம் விற்றதாக பள்ளத்துார் போலீசார் ஆக.,11ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்நடக்கிறது. வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகவில்லை. செஷன்ஸ் நீதிமன்ற தலைமை எழுத்தர் ராமசந்திரன் புகாரில் சிவகங்கை எஸ்.ஐ.,

கோர்ட்டில் ஆஜர் ஆகாதவர் மீது வழக்குசிவகங்கை: காரைக்குடி அருகே கோட்டையூர் காளிமுத்து 50. இவர் பெட்டிக்கடையில் மதுபானம் விற்றதாக பள்ளத்துார் போலீசார் ஆக.,11ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்நடக்கிறது. வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகவில்லை. செஷன்ஸ் நீதிமன்ற தலைமை எழுத்தர் ராமசந்திரன் புகாரில் சிவகங்கை எஸ்.ஐ., முத்துகிருஷ்ணன் வழக்கு பதிந்துள்ளார்.உதராப்புளி மக்கள் மீது வழக்குசிவகங்கை: சிவகங்கை அருகே உதராப்புளி கிராமத்தினர் வண்ணான்கால் கண்மாய் கழுங்கை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். காளையார்கோவில் பி.டி.ஓ., பிரதீப் புகார் அளித்தார். சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., ஸ்ரீதர் உதராப்புளி கிராம மக்கள் மீது வழக்கு பதிந்துள்ளார்.டோக்கன் லாட்டரி விற்பனைசிவகங்கை: மாவட்டத்தில் டோக்கன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார்கைது செய்து 45 டோக்கன், ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். லாட்டரி விற்றதாக இளையான்குடி ஜாபர் அலி 60, கண்ணன் 55, காரைக்குடி கோவிலுார் முரளிராஜன் 48, செந்தில்குமார் 43, ராமசந்திரன் 61, ஸ்டீபன் 38, திருப்புத்துார் அருகே என்.புதுார் காளீஸ்வரன் 35 ஆகிய 7 பேரை கைது செய்து 45 லாட்டரி டோக்கன் மற்றும் ரூ.21 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆயுதங்கள் வைத்திருந்த 2 பேர் கைதுகமுதி: கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பொந்தம்புளி பஸ்ஸ்டாப் அருகே அப்பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு 40,செய்யது இப்ராஹீம் 28, ஆயுதங்களுடன் இருந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் ஓடினர்.பின்பு ரமேஷ்பாபு,செய்யது இப்ராஹீமை கோவிலாங்குளம் போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து வாள்,கத்தியை பறிமுதல் செய்து கைது செய்தனர்.மது விற்றவர்கள் கைதுமானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் 43, கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ராஜாங்கம் 55, ஆகியோர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றதை அடுத்து மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.தற்கொலைசிப்காட்: மானாமதுரை அருகே க.ஆலங்குளம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமு 51,இவருக்கு சிறுநீரகம் பழுதாகி தீராத வயிற்று வலி இருந்தது. மனமுடைந்து துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X