பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விறுவிறு

Updated : நவ 15, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அவிநாசி : அத்திக்கடவு -- அவிநாசி திட்டப்பணிகள், 87 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தாண்டு ஜூலை, ஆக., மாதங்களில் வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,652 கோடி ரூபாய் செலவில், அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம், 1,045 குளங்கள், குட்டைகள், 24 ஆயிரத்து 468 ஏக்கர் பரப்பிலான விவசாய
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விறுவிறு

அவிநாசி : அத்திக்கடவு -- அவிநாசி திட்டப்பணிகள், 87 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்தாண்டு ஜூலை, ஆக., மாதங்களில் வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,652 கோடி ரூபாய் செலவில், அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம், 1,045 குளங்கள், குட்டைகள், 24 ஆயிரத்து 468 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.
அன்னுார், பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, ஆகிய இடங்களில் நீரேற்று நிலைய கட்டுமானப்பணி முழுமை பெற்றுள்ளது. அனைத்து நீரேற்று நிலையங்களிலும், 'டிரான்ஸ்பார்மர்' பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.

மொத்தம், 1,058 கி.மீ., நிலத்தடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 261 கி.மீ.,க்கு இரும்பு குழாய் பதிக்கப்பட உள்ள நிலையில், இதுவரை, 217 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது. 798 கி.மீ.,க்கு உயர் அடர்த்தி பாலியுரேத்தின் குழாய் பதிக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரை, 642 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது.
திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறுகையில், ''இதுவரை, 87 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மழையால், பணியில் சற்று தொய்வு தென்பட்டுள்ளது. ''மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தாண்டு ஜனவரியில் திட்டப்பணி நிறைவு பெற்று, பரிசோதனை மேற்கொள்ளப்படும். ''ஜூலை, ஆகஸ்டில் பெய்யும் மழை, வெளியேறும் நீரின் அடிப்படையில், வெள்ளோட்டம் பார்க்கப்படும்,'' என்றார்.


60 ஆண்டு கனவு



ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர், பவானிசாகர் அணை வழியாக காளிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி, அதில் இருந்து வெளியேறும் நீரை, 1.5 டி.எம்.சி.. அளவுக்கு நீரேற்று நிலையங்கள் வாயிலாக பெற்று, இத்திட்டப் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டு பெய்த மழையால் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறியது.அடுத்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதம் பலத்த மழை பெய்து, காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேறும்போது, அத்திக்கடவு திட்டம் வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளதால், அடுத்தாண்டு மழை பொழிவு, மூன்று மாவட்ட மக்களின், 60 ஆண்டுகள் கனவு திட்டத்தை நனவாக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
16-நவ-202111:21:19 IST Report Abuse
Dinesh Pandian உயர் அடர்த்தி பாலிதீன் குழாய் , பாலியூர்த்தனே குழாய் அல்ல
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
14-நவ-202112:52:36 IST Report Abuse
chennai sivakumar ஒரு தலைமுறை கடந்து விட்டது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
14-நவ-202112:38:19 IST Report Abuse
vbs manian இதை காலத் தோடு நிறைவேற்றியிருந்தால் ஆட்சி பறி போயிருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X