போலீஸ் செய்திகள்..

Added : நவ 13, 2021
Share
Advertisement
லாட்டரி விற்ற முதியவர் கைதுசிவகாசி: பள்ளபட்டி மீனாட்சி காலனியை சேர்ந்தவர் சமுத்திர பாண்டியன் 70. தடை லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து ரூ.750, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.மூன்று குழந்தைகளுடன் தாய் மாயம்சிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஜெயரதி 28. இவரது கணவர் இறந்த நிலையில், தனது மூன்று குழந்தைகளுடன்

லாட்டரி விற்ற முதியவர் கைதுசிவகாசி: பள்ளபட்டி மீனாட்சி காலனியை சேர்ந்தவர் சமுத்திர பாண்டியன் 70. தடை லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து ரூ.750, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.மூன்று குழந்தைகளுடன் தாய் மாயம்சிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஜெயரதி 28. இவரது கணவர் இறந்த நிலையில், தனது மூன்று குழந்தைகளுடன் நவ.6ல், துாத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர் குழந்தைகளுடன் மாயமானார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.மண் அள்ளும் இயந்திரத்தில் மோதி பலிவிருதுநகர்: செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் 39. மண் அள்ளும் இயந்திரத்தை சூலக்கரையில் விட நவ.,11ல் சர்வீஸ் ரோட்டில் ஓட்டி சென்றார். எதிரே அழகாபுரி மறவர் காலனியை சேர்ந்த அய்யனார் குடிபோதையில் டூவீலரை ஓட்டி வந்து (ெஹல்மெட் அணியவில்லை) மண் அள்ளும் இயந்திரத்தில் மோதினார். மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.வாகனம் மோதி பலிகாரியாபட்டி: சத்திரபுளியங்குளத்தை சேர்ந்த முத்துமணி 75, நேற்று முன்தினம் ஆண்மைபெருக்கி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, தனியார் வாகனம் மோதி பலியானார். வேன் டிரைவர் முத்து முருகனை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.மணல் திருடியவர்கள் கைதுகாரியாபட்டி: ஏ. நெடுங்குளம் தெற்காறு பாலம் அருகே 50 சிமென்ட் சாக்குகளில் மணல் அள்ளி மினி வேனில் ஏற்றிய அதே ஊரைச் சேர்ந்த அருள்பாண்டி 26, முத்துசாமி 45 , யை எஸ்.ஐ., அசோக்குமார கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X