தமிழ்நாடு

புழல் உபரி நீரால் மணலி துண்டிப்பு; தீவாக மாறியது சடையங்குப்பம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
மணலி : புழல் உபரி நீரால், மணலி செல்லும் இரு சாலைகளும் வெள்ள நீரில் துண்டிக்கப்பட்டன. சடையங்குப்பம் செல்லும் மூன்று பாதைகளும் வெள்ள நீர் சூழ்ந்ததால், அந்த பகுதி தீவு போல காட்சியளிக்கிறது.சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரி, முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதிகபட்சமாக, வினாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.திறந்துவிடப்படும் உபரி நீர்,
 புழல் உபரி நீரால் மணலி துண்டிப்பு;  தீவாக மாறியது சடையங்குப்பம்

மணலி : புழல் உபரி நீரால், மணலி செல்லும் இரு சாலைகளும் வெள்ள நீரில் துண்டிக்கப்பட்டன. சடையங்குப்பம் செல்லும் மூன்று பாதைகளும் வெள்ள நீர் சூழ்ந்ததால், அந்த பகுதி தீவு போல காட்சியளிக்கிறது.

சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரி, முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதிகபட்சமாக, வினாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.திறந்துவிடப்படும் உபரி நீர், நாரவாரிகுப்பம், தண்டல் கழனி, சாமியார் மடம், வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல் தரைப்பாலம் வழியாக செல்கிறது.

எஸ்.ஆர்.எப்., சந்திப்பு, பர்மா நகர் இரும்பு பாலம், சடையங்குப்பத்தில் சென்று, எண்ணுார் முகத்துவாரம் வாயிலாக கடலில் கலக்கிறது.ஆமுல்லைவாயல் தரைப்பாலம் வரை, நீர்வழித்தடம் ஓரளவிற்கு சரியாக உள்ளது. அதன் பின், நீர் செல்ல போதுமான கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லை.நீர்வரத்து அதிகரித்ததால், ஆமுல்லைவாயல் தரைப்பாலம் அருகே 2017ல் இடித்து வைக்கப்பட்ட, சி.பி.சி.எல்., தடுப்புச் சுவர் வழியாக உபரி நீர் வெளியேற வழி செய்யப்பட்டுள்ளது.இதனால், சமையல் எரிவாயு தயாரிப்பு நிறுவனமான ஐ.ஓ.டி., நிறுவனத்திற்குள் செல்லும் இரு தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கின. எஸ்.ஆர்.எப்., நிறுவனத்திற்கு பின்புறத்தில் இருந்து, வலது பக்கமாக கரை அமைப்பு ஏதுமில்லாததால், உபரி கால்வாயை ஒட்டிய நிறுவனங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.எம்.எப்.எல்., நிறுவனத்திற்குள் புகுந்து, மணலி செல்லும் பொன்னேரி நெடுஞ்சாலையை மூழ்கடித்தது.

இதனால் மேலும் எம்.எப்.எல்., சந்திப்பு, மணலி விரைவு சாலை வழியாக வழிந்தோடி, மீண்டும் உபரி கால்வாயை நோக்கி பாய்கிறது.உபரி நீர் கரைகளை மீறி தாறுமாறாக பாய்வதால், மணலி செல்லும் எம்.எப்.எல்., சந்திப்பு - சி.பி.சி.எல்., சந்திப்பு வரையிலான, பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

அதேபோல், எஸ்.ஆர்.எப்., சந்திப்பு அருகே, மணலிக்கு செல்லும் நெடுஞ்செழியன் தெரு தார்ச் சாலையில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.இதன் காரணமாக, மணலி மக்கள் போக்குவரத்திற்காக மஞ்சம்பாக்கம், மாத்துார் வழியை பயன்படுத்துகின்றனர்.மக்கள் திண்டாட்டம்மணலி 16வது வார்டு, சடையங்குப்பம், பர்மா நகரில் 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்கள், புழல் உபரி கால்வாயை கடந்து தான் வெளியே வர வேண்டும்.சடையங்குப்பம் மேம்பாலம், பர்மா நகர் உயர்மட்ட மேம்பால பணிகள் இன்னும் முடியவில்லை.

தற்போது, புழல் உபரி கால்வாயில் 3,000 கனஅடிக்கும் மேல் உபரி நீர் பாய்வதால், சடையங்குப்பம் மேம்பாலத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் ௪ அடிக்கு உபரி நீர் செல்கிறது.பர்மா நகர் உயர்மட்ட பால பகுதியிலும், மார்பளவிற்கு உபரி நீர் செல்கிறது.இதனால் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். பர்மா நகரில் இருந்து, வைக்காடு சந்திப்பு - பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக மழை நீர் வெளியேறுவதால், அந்த சாலையிலும் இடுப்பளவிற்கு உபரி நீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமலும், அத்தியாவசிய தேவைக்கு திண்டாடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X