பல்லடம்: பல்லடம், என்.எச்., ரோட்டில் உருவாகியுள்ள சேறும், சகதியும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி அவதிக்குள்ளாக்கி வருகின்றன.பல்லடம் வாழ் மக்களுக்கு, பணப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை உள்ள, 2.5 கி.மீ.,ல் எண்ணற்ற இன்னல்களை வாகன ஓட்டிகள் தினமும் சந்தித்து வருகின்றனர். சாதாரண நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மன உளைச்சலை ஏற்படுத்தி வர, தற்போது கூடுதல் பிரச்னைகளும் உருவெடுத்துள்ளன.மழை காரணமாக, பல இடங்களில் ரோடு கரைந்து ஆபத்தான பள்ளங்கள் உருவாகியுள்ளன. ரோட்டோரத்தில் இருந்த மண்ணுடன், பள்ளங்களை மூட பயன்படுத்தப்பட்ட மண்ணும் சேர்ந்து, சேறும் சகதியுமாக ரோடு மாறியுள்ளது.ஆபத்தான பள்ளம், சேறு சகதி நிறைந்த ரோடு, புழுதிக்காடு என, இவை அனைத்தையும் கடந்து வாகன ஓட்டிகள் என்.எச்., ரோட்டில் தினந்தோறும் 'சாகசம்' நடத்தி வருகின்றனர். பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் மூலம், பாதசாரிகளுக்கு அன்றாடம் அபிஷேகம் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது.பெருநகரங்களை இணைக்கும், பல்லடம் - என்.எச்., ரோடு, தனது தரத்தை முற்றிலும் இழந்து நிற்கிறது. இதற்கு என்றுதான் தீர்வு ஏற்படுமோ என்பது, வாகன ஓட்டிகளின் அன்றாட புலம்பலாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE