கொல்லப்பட்டவர் யார்? கண்டறிவதில் சிக்கல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பூர்: சோளிபாளையம் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர், வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோளிபாளையம் பகுதியில் கடந்த 9 ம் தேதி ஒரு ஆண் சடலம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது.போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் குறித்த எந்த விவரமும் இது வரை

திருப்பூர்: சோளிபாளையம் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர், வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோளிபாளையம் பகுதியில் கடந்த 9 ம் தேதி ஒரு ஆண் சடலம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது.போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் குறித்த எந்த விவரமும் இது வரை தெரியவில்லை.இந்நிலையில் அடையாளம் தெரியாத அவர் குறித்து போலீசார் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி, தகவல் பெற முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இதற்காக சடலத்தின் போட்டோவுடன் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக் செட் கட்டிய சரக்கு ஆட்டோவில் இது குறித்த பேனருடன் வித்தியாசமான முறையில் போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X