சீறியிருக்க வேண்டாமா வைகோ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சீறியிருக்க வேண்டாமா வைகோ'

Added : நவ 13, 2021
Share
சென்னை:'முல்லை பெரியாறு அணை பற்றி, சிகரம் தெரிந்த வைகோ சீறியிருக்க வேண்டாமா' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:இலங்கை தமிழர், காவிரி நதிநீர், மீனவர் இன்னல் என, பல பிரச்னைகளுக்கு எழுச்சி உரை நிகழ்த்தி போராட்டம் நடத்தியவர் வைகோ. முல்லை பெரியாறு அணையை தி.மு.க., அரசு கேரளாவிற்கு தாரை வார்த்து, அணையின் மதகுகளை கேரள அமைச்சர் திறந்த போது,

சென்னை:'முல்லை பெரியாறு அணை பற்றி, சிகரம் தெரிந்த வைகோ சீறியிருக்க வேண்டாமா' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:இலங்கை தமிழர், காவிரி நதிநீர், மீனவர் இன்னல் என, பல பிரச்னைகளுக்கு எழுச்சி உரை நிகழ்த்தி போராட்டம் நடத்தியவர் வைகோ. முல்லை பெரியாறு அணையை தி.மு.க., அரசு கேரளாவிற்கு தாரை வார்த்து, அணையின் மதகுகளை கேரள அமைச்சர் திறந்த போது, தமிழக விவசாயிகள் துடித்து போனார்களே; அப்போது, துயர் துடைக்க, போராட வைகோ வருவார் என்று விவசாயிகள் காத்திருந்தனர்.'

முல்லை பெரியாறு அணைக்காக, நான் நான்கு முறை போராட்டம் நடத்தி விட்டேன்; அது முடிந்து போன பிரச்னை' என்று தன் அறிக்கையில் முழங்கி இருக்கிறார் வைகோ.ஆனால், இப்போது தி.மு.க.,வின் அக்கறை இன்மையால், ஆளுமை குறைவால் உருவான பிரச்னையை, விவசாயிகளின் தவிப்பை, அவர் கண்டுகொள்ளவே இல்லை என, தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.

போராட்டம் முடிந்த நான்கு நாட்களுக்கு பின், மெதுவாய் வைகோ வாய் திறப்பது, பா.ஜ., போராட்டத்தால், விவசாயிகளால் ஏற்பட்ட அழுத்தத்தலா; ஆளுங்கட்சிக்கு ஒத்து ஊதும் அரசியலுக்காகவா. தி.மு.க., அரசிற்கு ஒற்றை கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்.முல்லை பெரியாறு பற்றி அகரம் தெரியாத அண்ணாமலை, என் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று அறிவித்து உள்ளீர்கள்;

நன்றி. ஆனால், அதன் சிகரம் தெரிந்த நீங்கள் சீறியிருக்க வேண்டாமா?மக்கள் பிரச்னைக்காக, விவசாயிகளுக்காக நான் போராடும் போது, அதை தள்ளி நின்று, எள்ளி நகையாடுவது யாரை திருப்திப்படுத்த...

காலம் காலமாக தமிழகத்தில், போராட்டத்திற்கு மட்டும் பயன்பட்ட காவிரி நீர், மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டது பா.ஜ., தான்.ஆகவே, முல்லை பெரியாறு அணை குறித்து போராடாவும், பேசவும், முழு உரிமையும், தகுதியும் உள்ள ஒரே கட்சி பா.ஜ., என்பதை மக்கள் அறிவர்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X