குழந்தைகள் தின கொண்டாட்டம் பள்ளிகளில் 'குட்டீஸ்' உற்சாகம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பூர்: முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினவிழாவாக பல்வேறு பள்ளிகளில் நேற்று கொண்டாடப்பட்டது.விகாஸ் வித்யாலயா திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில், மாநகரா போலீஸ் துணை ஆணையர் அரவிந்த், வடக்கு சரக உதவி ஆணையர் அனில் குமார், இன்ஸ்பெக்டர் கணேசன் பங்கேற்று, கடந்தாண்டு பொதுத்தேர்வில்,

திருப்பூர்: முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினவிழாவாக பல்வேறு பள்ளிகளில் நேற்று கொண்டாடப்பட்டது.விகாஸ் வித்யாலயா திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில், மாநகரா போலீஸ் துணை ஆணையர் அரவிந்த், வடக்கு சரக உதவி ஆணையர் அனில் குமார், இன்ஸ்பெக்டர் கணேசன் பங்கேற்று, கடந்தாண்டு பொதுத்தேர்வில், முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, விருது வழங்கி சிறப்பித்தனர். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து, சிறப்புரையாற்றினார். பள்ளியின் துணைச் செயலாளர் சிவப்பிரியா, மாதேஸ்வரன் பேசினர். பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார். கதிரவன் பள்ளி திருப்பூர், மங்கலம் ரோட்டிலுள்ள கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழாவிற்கு பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். தொடர்ந்து, மாணவர்களிடம் இலக்குகள், செயல்பாடுகள் சிறந்த முறையில் இருக்க வேண்டும் எனவும், தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் படிப்பதன் அவசியத்தையும் விளக்கினார். குழந்தைகளுக்கு பல்வேறு போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி செயலாளர் இந்திராணி, அறக்கட்டளை உறுப்பினர் நிவேதா பங்கேற்றனர்.ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி திருப்பூர், ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில், பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி சிறப்புரை ஆற்றினார். நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை, குழந்தைகளுக்காக, ஆசிரியர்களால் நடத்தி, மகிழ்வித்தனர். தலைமையாசிரியை ப்ரமோதினி நன்றி கூறினார். வேலவன் பள்ளிபலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மழலைகள், நேருவின் திருவுருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தனர். அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.கிட்ஸ் கிளப் பள்ளிதிருப்பூர், ஷெரீப் காலனியிலுள்ள, கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், 100 மீ, 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வாலிபால், எறிபந்து போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளி தலைவர் மோகன் கார்த்திக் பரிசு வழங்கினார். பள்ளி தாளாளர் வினோதினி செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா மற்றும் முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.பிளாட்டோஸ் அகாடமிதிருப்பூர், பெரியாண்டிபாளையம், பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் நடந்த விழாவில், அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளுடன், இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் நடனமாடியும், பாடல் பாடியும், மாணவர்களை மகிழ்வித்தனர். பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், முதல்வர், ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X