வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பல்!

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் கோவில் வழி பகுதியில் தொடரும் திருட்டு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் கண்காணிப்பு மந்தமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர் -- தாராபுரம் ரோடு, கோவில் வழி அருகே பிள்ளையார் நகர், புது பிள்ளையார் நகர் மற்றும் சேரன் நகர் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் கோவில் வழி பகுதியில் தொடரும் திருட்டு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் கண்காணிப்பு மந்தமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர் -- தாராபுரம் ரோடு, கோவில் வழி அருகே பிள்ளையார் நகர், புது பிள்ளையார் நகர் மற்றும் சேரன் நகர் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீப காலமாக திருட்டு சம்பவம் தலை துாக்கி உள்ளது.சில நாட்கள் முன்பு, பையிங் ஆபீஸ் நடத்தி வரும் ஒருவர், தீபாவளி பண்டிகையொட்டி குடும்பத்துடன் வெளியூர் சென்றார். பின், வீடு திரும்பிய போது, வீட்டில் திருட்டு முயற்சி நடந்தது தெரிய வந்தது. வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நகை, பணம் கிடைக்காத கோபத்தில் வீட்டுக்குள் இருந்த, ஐந்து கதவுகளை உடைத்து சேதப்படுத்தியும், பீரோவில் இருந்த ஆவணங்களை கிழித்து எறிந்து சென்றதும் தெரியவந்தது. திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ரோந்து மந்தம்அப்பகுதியினர் கூறியதாவது:பிள்ளையார் நகர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பகுதிகளை மர்ம நபர்கள் நோட்டமிட்டு, சில கால இடைவெளியில் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் நடந்த, மூன்று திருட்டு சம்பவங்களும், வீட்டு கதவின் பூட்டு, பெரிய கம்பியால் நெம்பப்பட்டு உடைக்கப்பட்டு உள்ளது. மூன்று சம்பவமும் ஒரே மாதிரி உள்ளது. முதலில் நடந்த, இரண்டு திருட்டுகளில், பணம், நகை, வெள்ளி பொருட்கள் திருடு போனது.மூன்றாவது திருட்டில், வீட்டுக்குள் நுழைந்த நபர்களுக்கு பணம், நகை சிக்காத காரணத்தால், வீட்டு பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளனர். மூன்று திருட்டு சம்பவங்களும், பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியூர் சென்ற நேரத்தில் நடந்துள்ளது. அப்பகுதியில் மர்ம நபர்கள் தங்கி கொண்டு, வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் உள்ளது.போலீசார் ரோந்து மந்தமாக இருந்து வருகிறது. ரோந்து பணியை தீவிரப்படுத்துவதோடு, 'மப்டி' போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X