சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளக்காடான குமரி கிராமங்கள்

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021
Share
Advertisement
நாகர்கோவில் :கன்னியாகுமரி மாவட்டத்தை மழை புரட்டி போட்டது. கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நவ.,11 முதல் மழை வலுத்தது. பகலில் லேசாக ஒய்ந்திருக்கும் மழை இரவில் கொட்டி தீர்க்கிறது. நேற்று பகலிலும் மழை நீடித்தது. நேற்று மாலை 5:00
வெள்ளக்காடான குமரி கிராமங்கள்

நாகர்கோவில் :கன்னியாகுமரி மாவட்டத்தை மழை புரட்டி போட்டது. கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நவ.,11 முதல் மழை வலுத்தது. பகலில் லேசாக ஒய்ந்திருக்கும் மழை இரவில் கொட்டி தீர்க்கிறது. நேற்று பகலிலும் மழை நீடித்தது.

நேற்று மாலை 5:00 மணிக்கு சுசீந்திரம் பழையாற்றில் தண்ணீர் கரை புரண்டு நாகர்கோவில் - கன்னியாகுமரி ரோட்டை கடந்து ஊருக்குள் வர துவங்கியது. சிறது நேரத்தில் தண்ணீர் அதிகரித்து கோவிலுக்குள் தண்ணீர் செல்ல துவங்கியது. சுசீந்திரம், தென்தாமரைகுளம் உட்பட 150க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை போலீசார் தீயணைப்புத்துறையினர் இரவு பகலாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தன-ர்.


latest tamil news



ரயில்சேவை பாதிப்பு



மழையால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் பாதையில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இரணியல் - குழித்துறை இடையே மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இரணியல் ரயில் நிலையம் தண்டவாளம் தெரியாத அளவு தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணியர் பாதிக்கப்பட்டனர். மண்சரிவை சரி செய்யும் நடவடிக்கையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயில் நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டு கன்னியாகுமரி செல்லும் பயணியர் பஸ்சில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.


போக்குவரத்து பாதிப்பு



ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பல இடங்களிலும் ரோடுகள் துண்டிக்கப்பட்டது. ஒழுகினசேரி வழியாக திருநெல்வேலி செல்லும் பஸ்கள் அஞ்சுகிராமம் வழியாக திருப்பி விடப்பட்டது. பூதப்பாண்டி வழியாக செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களிலும் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு 1,200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை போன்ற வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் பகலில் தொடர்ந்து மழை பெய்தது.
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு அதிக நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. வெள்ள நீர் அகஸ்தியர் அருவியில் கொட்டியது.மாவட்டம் முழுதும் மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தை கடந்து மருதுார் அணைக்கு பின் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லவேண்டாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X