இடுப்பளவு நீரில் சென்று தன்னார்வலர்கள் உதவி

Added : நவ 13, 2021
Advertisement
சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு, இடுப்பளவு நீரில் சென்று, தன்னார்வலர்கள் உதவினர்.வேளச்சேரி தீபம் அறக்கட்டளை, செம்மஞ்சேரி ஜவகர் நகர் குடியிருப்போர் நலசங்கம், பெரும்பாக்கம் எட்டுமாடி குடியிருப்பில் உள்ள, 'நம்மால் முடியும், மக்கள் சக்தி இயக்கம்' போன்ற அமைப்புகள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு தேடி சென்று உதவினர்.கண்ணகிநகர்
 இடுப்பளவு நீரில் சென்று  தன்னார்வலர்கள் உதவி

சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு, இடுப்பளவு நீரில் சென்று, தன்னார்வலர்கள் உதவினர்.வேளச்சேரி தீபம் அறக்கட்டளை, செம்மஞ்சேரி ஜவகர் நகர் குடியிருப்போர் நலசங்கம், பெரும்பாக்கம் எட்டுமாடி குடியிருப்பில் உள்ள, 'நம்மால் முடியும், மக்கள் சக்தி இயக்கம்' போன்ற அமைப்புகள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு தேடி சென்று உதவினர்.கண்ணகிநகர் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தினர்,

ஆறு நாட்களாக சமையல் செய்து வீடுதேடி சென்று உணவு வழங்குகின்றனர்.பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை, துரைப்பாக்கம், கண்ணகிநகர் போலீசாரும், அங்குள்ள தன்னார்வ அமைப்புகள், வியாபாரிகளுடன் சேர்ந்து, மீட்பு, உணவு, உடை வினியோகம் போன்ற பணியில் ஈடுபட்டனர்.மேலும், தனி நபர்கள், அவர்களால் இயன்ற பொருள் உதவிகள் செய்தனர். இதனால், மழையால் பாதிக்கப்பட்ட பலர் பயன் அடைந்தனர். இந்த ஆர்வலர்கள் உதவிய பகுதிகளில், இடுப்பளவு வெள்ளம் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X