புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர், நர்ஸ்கள் உள்ளிட்ட இதர மருத்துவ பணியாளர்களுக்கு பாதபூஜை செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களுக்கு பா.ஜ., நிர்வாகிகள் நேற்று பாதபூஜை செய்தனர். இதில் பா.ஜ., திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கொத்தமங்கலம் கிராம பஞ்., தலைவர் சாந்தி வளர்மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: இந்தியாவில், 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி சாதனை படைத்து இருக்கிறோம். இந்த சூழலில் டாக்டர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் என, அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரதமர் நற்சான்றிதழ் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில், கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர், நர்ஸ்கள் உள்ளிட்ட இதர மருத்துவ பணியாளர்களின் பணியை போற்றும் வகையில், பா.ஜ., சார்பில் பாதபூஜை செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE