மழை நீர் அகற்றும் பணி குடிநீர் வாரியம் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் அகற்றும் பணி குடிநீர் வாரியம் தீவிரம்

Added : நவ 13, 2021
Share
சென்னை : சென்னையில் மழை நீர் அகற்றும் பணியில், குடிநீர் வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.சென்னையில் பருவ மழை தீவிரமானதை தொடர்ந்து, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது.இதையடுத்து 15 மண்டலங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில், 2,000 குடிநீர் வாரிய களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.குடிநீர் வாரியம்

சென்னை : சென்னையில் மழை நீர் அகற்றும் பணியில், குடிநீர் வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.சென்னையில் பருவ மழை தீவிரமானதை தொடர்ந்து, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது.

இதையடுத்து 15 மண்டலங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில், 2,000 குடிநீர் வாரிய களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.குடிநீர் வாரியம் சார்பில், 59 நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவு நீர் செல்லும் பிரதான பாதைகளில் அடைப்பை நீக்க, 142 ஜெட்ராடா இயந்திரங்கள், கழிவு நீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க, 260 துார் வாரும் ஆட்டோக்கள் மழை நீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பருவ மழைக்கு முன்னதாக நாள் ஒன்றிற்கு 580 எம்.எல்.டி., கழிவு நீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட நிலையில், பருவ மழையை தொடர்ந்து நாள் ஒன்றிற்கு 850 எம்.எல்.டி., கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகரில் கழிவு நீர் அகற்றம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பான புகார்களுக்கு, 044 - 4567 4567 மற்றும் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1916 ஆகிய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X