ரேஷன் கடைக்குள் மழைநீர் சேகரிப்பு?| Dinamalar

ரேஷன் கடைக்குள் மழைநீர் சேகரிப்பு?

Added : நவ 13, 2021
Share
பல்லடம்: அல்லாளபுரத்தில், ரேஷன் கடைக்குள் மழைநீர் சேகரிக்கப்பட்டு வருவது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. பல்லடம் அடுத்த, அல்லாளபுரத்தில் உள்ள ரேஷன் கடை கட்டடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கட்டடத்தின் மேற்கூரைகள் விரிசல் விட்டு, மழைநீர் கசிந்து கடைக்குள் விழுகின்றது. பொதுமக்கள் கூறுகையில்,

பல்லடம்: அல்லாளபுரத்தில், ரேஷன் கடைக்குள் மழைநீர் சேகரிக்கப்பட்டு வருவது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. பல்லடம் அடுத்த, அல்லாளபுரத்தில் உள்ள ரேஷன் கடை கட்டடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கட்டடத்தின் மேற்கூரைகள் விரிசல் விட்டு, மழைநீர் கசிந்து கடைக்குள் விழுகின்றது. பொதுமக்கள் கூறுகையில், 'ரேஷன் கடை கட்டடம் சேதம் அடைந்து பல ஆண்டு ஆகிறது. கட்டடத்தின் வெளிப்புறம் சேதமடைந்தது குறித்து ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
இதுவரை, கடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது, கடைக்குள் மேற்கூரை சேதமடைந்ததால், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழை நீர் சொட்டுச் சொட்டாக கசிந்து, கடைக்குள் விழுகிறது. மழைநீர் சேகரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. கடைக்குள் மழைநீர் கசிந்து விழுவதால், ரேஷன் பொருட்கள் தரத்துடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் ரேஷன் கடையை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சீரமைக்க வேண்டியது அவசியம். மழைக்காலம் என்பதால், இனியும் தாமதிக்காமல் சீரமைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X