சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Added : நவ 13, 2021
Share
சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சிறுபாக்கம் ஊராட்சியில் குளத்துமேட்டு தெரு தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலை மிகவும் சேதமடைந்து சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபாக்கம் ஊராட்சியில் குளத்துமேட்டு தெரு தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலை மிகவும் சேதமடைந்து சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

ஊராட்சி நிர்வாகம் மற்றும் மங்களூர் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.இதனால், அப்பகுதி மக்கள் நேற்று காலை 9:00 மணியளவில், சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X