துப்புரவு ஆய்வாளருக்கு கமிஷனர் நோட்டீஸ்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

துப்புரவு ஆய்வாளருக்கு கமிஷனர் நோட்டீஸ்

Added : நவ 14, 2021
Share
திருப்பூர்: காங்கயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு ஊழியர் நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என, துப்புரவு ஆய்வாளருக்கு நகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.காங்கயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார், முன்னாள் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜூக்கு அனுப்பிய நோட்டீஸ் விவரம்:காங்கயம் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு ஊழியர்

திருப்பூர்: காங்கயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு ஊழியர் நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என, துப்புரவு ஆய்வாளருக்கு நகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.காங்கயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார், முன்னாள் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜூக்கு அனுப்பிய நோட்டீஸ் விவரம்:காங்கயம் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு ஊழியர் நியமிக்கப்பட்டது குறித்த விவரங்கள், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்திலிருந்து கேட்கப்பட்டது. ஆனால், பதில் சமர்ப்பிக்கவில்லை. ஆய்வு செய்த போது 2016ம் ஆண்டில், இந்த பணிக்கு 36 தற்காலிக ஊழியர் நியமிக்கப்பட்டதும், அதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிய வந்துள்ளது.இதனால் நிர்வாகத்துக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.செல்வராஜ் தற்போது ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியில் பணியாற்றுவதுகுறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X