தோட்டக்கலை பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்யலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்யலாம்

Added : நவ 14, 2021
Share
புவனகிரி : கீரப்பாளையம் வட்டாரத்தில் ரபி பருவத்தில் வாழை, மரவள்ளி, கத்தரி, மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கீரப்பாளையம் வட்டாரத்தில் ரபி பருவத்தில், வாழை, கத்தரி, மரவள்ளி, மிளகாய் பயிரிடும் விவசாயிகள் மழை வெள்ள

புவனகிரி : கீரப்பாளையம் வட்டாரத்தில் ரபி பருவத்தில் வாழை, மரவள்ளி, கத்தரி, மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:கீரப்பாளையம் வட்டாரத்தில் ரபி பருவத்தில், வாழை, கத்தரி, மரவள்ளி, மிளகாய் பயிரிடும் விவசாயிகள் மழை வெள்ள காலத்தினால் சேதமடைவது தொடர் கதையாக உள்ளது. தோட்டப் பயிர்கள் செய்துள்ள விவசாயிகள் 2021-22ம் ஆண்டு பிரதம மந்திரி ரபி பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.வாழை ஏக்கருக்கு ரூ. 2,571 காப்பீடு தொகை, மரவள்ளி ஏக்கருக்கு ரூ.1,346 காப்பீடு தொகை, கத்தரி ஏக்கருக்கு ரூ.50; மிளகாய் ஏக்கருக்கு ரூ. 964 காப்பீடு தொகையை வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X