பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார். அப்போது, 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். புதிய
 வாக்காளர் சிறப்பு முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.

அப்போது, 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். புதிய வாக்காளர்கள் யார், அவர்களது குடும்ப விபரம், இடம் பெயர்ந்த மற்றும் இறந்தவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது போன்ற பணிகளில் கவனமுடன் ஈடுபடுமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.

அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், முன்னாள் நகராட்சித் தலைவர் அருளழகன், துணை செயலாளர் சத்யா செல்வம், எம்.ஜி.ஆர்., இளைஞரணி அரங்கமணிவண்ணன், நிர்வாகிகள் முக்தார் அலி, கண்ணன், நவநீதகிருஷ்ணன், ரம்யா, பெரியசாமி, ரஞ்சித்குமார், முருகன் உடனிருந்தனர்.

திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம், கம்மாபுரம், புவனகிரி, சேத்தியாதோப்பு பகுதிகளில் நடந்த முகாமை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X