பொது செய்தி

தமிழ்நாடு

மரபு சார் பொருட்களின்

Added : நவ 14, 2021
Share
Advertisement
--'என்ன இருந்தாலும், அந்த காலம் மாதிரி வருமா... இப்படியான மன ஒட்டம், எந்த காலத்திலும் இருக்கும். அதற்கு காரணம், அந்த காலத்து உணவு முறையும். வாழ்க்கை சூழலும் தான்.தள்ளாத வயதில் கூட, நோய், நொடியின்றி திடகாத்திரமாய் வாழ்ந்த சமுதாயத்தை, கருப்பு வெள்ளை காலங்கள் நமக்கு தந்தன. மருத்துவம் வளராத போதும் கூட உணவையே மருந்தாக்கி, உடல் உபாதையின்றி வாழ்ந்த சமுதாயம் அது.வேகமாக மறைந்து

--'என்ன இருந்தாலும், அந்த காலம் மாதிரி வருமா... இப்படியான மன ஒட்டம், எந்த காலத்திலும் இருக்கும். அதற்கு காரணம், அந்த காலத்து உணவு முறையும். வாழ்க்கை சூழலும் தான்.தள்ளாத வயதில் கூட, நோய், நொடியின்றி திடகாத்திரமாய் வாழ்ந்த சமுதாயத்தை, கருப்பு வெள்ளை காலங்கள் நமக்கு தந்தன. மருத்துவம் வளராத போதும் கூட உணவையே மருந்தாக்கி, உடல் உபாதையின்றி வாழ்ந்த சமுதாயம் அது.வேகமாக மறைந்து போகும் அந்த மரபை மீட்டெடுக்கவும், அப்படியான ஒரு காலத்துக்குள் நம்மை அழைத்து செல்லவும், கதவு திறந்து காத்திருக்கிறது, அவிநாசி பழங்கரை சாலை, நல்லிகவுண்டம்பாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள 'தைத்திங்கள்' மரபுக்கடை.மூங்கில் கூரையால் வேயப்பட்டு, கிராமத்து குடிசை வடிவில் அமைந்துள்ளது தான் அதன் அடையாளம்.அதனுள்... ஒன்றல்ல, இரண்டல்ல.. 1,250க்கும் மேற்பட்ட மரபு சார்ந்த பொருட்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் பெயர்கள் அச்சிடப்பட்ட டீ-சர்ட் உள்ளிட்ட ஆடைகள் துவங்கி, மூலிகை நாட்டு மருந்து, மரத்தால் தயாரிக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மை, மரக்குதிரை, நடைவண்டி உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் வகையறாக்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மூலிகை சார்ந்த மளிகைப் பொருட்கள், பாரம்பரிய தின்பண்டங்கள், நாள்பட்ட வியாதிகளையும் நிரந்தரமாய் விரட்டும் நாட்டு மருந்துகள், பக்கவிளைவு இல்லாத அழகு சாதன பொருட்கள், சணல் பை, சென்னிமலை போர்வை. தெய்வீக பொருட்கள், மரபு விதைகள், புத்தகங்கள் என அணிவகுத்திருக்கும் பொருட்கள் ஏராளம்.கடையின் நிறுவனர்கள் கார்த்தி பிரியா, பெண்ணரசி ஆகியோர் கூறுகையில், "ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மரபு சார்ந்து பிரசித்தி பெற்றவையாக இருக்கும்; அவற்றின் முக்கியத்துவம் மறைந்து, உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும், தேடி பிடித்து, தருவித்து விற்பனை செய்து வருகிறோம். லண்டன், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். 'ஆன்லைன்' வர்த்தகம் மூலமே வர்த்தகம் செய்து வந்த நிலையில் தற்போது, கிராமத்து மண் வாசனையுடன் கூடிய கடையை திறந்துள்ளோம்," என்றனர்.இக்கடையின் வர்த்தகம் சார்ந்த பணிகளை கவனித்து வரும் கார்த்திபிரியாவின் கணவர் மணிகண்டன் கூறுகையில், "மரபு சார்ந்த பொருட்களை பயன்படுத்தி, நோய் நொடியின்றி அனைவரும் வாழ வேண்டும் என்பதே, எங்களின் நோக்கம்; ஒரு முறை வந்து பாருங்கள்; மரபு சார்ந்த பொருட்களின் மகத்துவத்தை உணர்ந்துக் கொள்வீர்கள்,'' என்றார் கண்களில் நம்பிக்கை மிளிர. தொடர்புக்கு : 9750903304.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X