பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல்; வீடு வீடாக கள ஆய்வு

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, நில நிர்வாகத்துறை கூடுதல் கமிஷனர் ஜெயந்தி, கலெக்டர் வினீத் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி உள்ளிட்டோர், வாக்காளர்

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, நில நிர்வாகத்துறை கூடுதல் கமிஷனர் ஜெயந்தி, கலெக்டர் வினீத் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி உள்ளிட்டோர், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து பேசினர். அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு கோரிக்கையை முன்வைத்தனர்.கோபாலகிருஷ்ணன் (மா.கம்யூ.,): வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிக்கு, கடந்த ஆண்டுகளை போல், போதிய விழிப்புணர்வு இல்லை. இறந்தவர் பெயரை நீக்க விண்ணப்பித்தும், பெயர் நீக்கப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் விண்ணப்பிக்க முன்வருவதில்லை.கண்ணபிரான் (அ.தி.மு.க.,): இறப்பு சான்றிதழ், 'ஆன்லைன்'மூலமாக வழங்கப்படுவதால், அதை சாட்சியாக கொண்டு, இறந்தவர் பெயரை நீக்க வேண்டும். ரேஷன் கார்டில் பெயர் நீக்குவது போல், வாக்காளர் பட்டியலிலும் நீக்க வேண்டும்.கோபால்சாமி (காங்.,): 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்தால், பெயர் சேர்ப்பு, நீக்கம் சரியாக நடக்கிறது. முகாமில் படிவம் வாங்கி விண்ணப்பித்தால், 90 சதவீதம் நடவடிக்கை இல்லை. பலமுறை விண்ணப்பித்தும், பெயர் நீக்கம் செய்யப்படவில்லை.ரவி (இந்திய கம்யூ.,): உள்ளாட்சி தேர்தலில், போட்டோவுடன் பூத் சிலிப் வழங்கவேண்டும். வீடு வீடாக சென்று, வாக்காளரை சரிபார்க்கும் வரை, பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி வெற்றிபெறாது.தேர்தல் பார்வையாளர் ஜெயந்தி பேசியதாவது:தொழிலாளர் அடிக்கடி இடம்பெயர்வதால், வாக்காளர் பட்டியல் குழப்பம் தீர்க்கப்படாமல் இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம், இறப்பு சான்றிதழ் பதிவு, பொது வினியோக திட்ட பதிவுகளை பயன்படுத்தி, இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்.திருப்பூர் மாநகராட்சியில் இடம்பெறும், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதி, வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீடுவீடாக கள ஆய்வு செய்யவும் பரிந்துரைக்கப்படும்.வாக்காளர் பெயர் சேர்ப்பின் போது, வாக்காளர் பதிவு அலுவலர், முந்தைய பெயர் பதிவு இருந்த தொகுதிக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பி, பெயர் நீக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.குறிப்பாக, பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்வதில், இந்த கடிதம் அனுப்பும் முறையை தொடர வேண்டும். பொதுவினியோக திட்ட 'ஆன்லைன்' பதிவை பயன்படுத்தி, வாக்காளர் இரட்டைப்பதிவை முறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X