இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் பலி

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்3 மகள்களை கொன்ற தந்தைக்கு மரண தண்டனைலலித்பூர்-உத்தர பிரதேசத்தில் மூன்று மகள்களை கொன்ற தந்தைக்கு, மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லலித்பூர் மாவட்டத்தின் வீர் என்ற கிராமத்தில் சித்தாமி, 35, என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இன்றைய கிரைம், ரவுண்ட், அப்,


இந்திய நிகழ்வுகள்3 மகள்களை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை
லலித்பூர்-உத்தர பிரதேசத்தில் மூன்று மகள்களை கொன்ற தந்தைக்கு, மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லலித்பூர் மாவட்டத்தின் வீர் என்ற கிராமத்தில் சித்தாமி, 35, என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2018ல் அவரது மனைவி வீட்டில் இல்லாதபோது அஞ்சனி, 11, ராட்டு, 7, புட்டு, 4, என்ற தன் மூன்று பெண் குழந்தைகளையும் சித்தாமி அடித்து கொலை செய்தார். சித்தாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான விசாரணை லலித்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் குற்றவாளியான சித்தாமிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ரூ 52,000 மோசடி: இருவர் கைது
புதுடில்லி-மொபைல் போனில் 'போன்பி வாலட்' வாயிலாக 52 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இருவரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டில்லியைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா. இவர், தன் மொபைல் போன் தொலைந்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து புதிய மொபைல் போன் வாங்கிய சந்தீப் சர்மா, அதில் தன் 'போன்பி வாலட்' கணக்கில் இருந்து 52 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார், போன்பி நிறுவனத்திடம் இருந்து சந்தீப் சர்மாவின் பணப் பரிவர்த்தனை விபரங்களை பெற்றனர்.

அதில் ராகுல் என்பவர், சந்தீப் சர்மாவின் மொபைல் போனை பயன்படுத்தி, சஞ்சய் என்ற நபருக்கு, ஏழு முறை மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து முகுந்த்புரில் பதுங்கியிருந்த ராகுலை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சஞ்சய் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். கம்ப்யூட்டர் நிபுணரான ராகுல், சந்தீப் சர்மா தவற விட்ட மொபைல் போனை எடுத்து, அதன் பாதுகாப்பு அம்சங்களை மாற்றி, போன்பி வாயிலாக பணத்தை சஞ்சய்க்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மொபைல் போன் வாயிலாக பல்வேறு பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான பணப் பரிவர்த்தனைகளுக்கு, போன்பி வாலட் 'ஆப்' உதவுகிறது.

ம.பி.,யில் 2 பேர் படுகொலை

பாலாகாட்: மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் நக்சலைட்டு களின் தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் தங்களைப் பற்றி போலீசாரிடம் தகவல் அளித்து வந்ததாக சந்தேகித்து, மாலிகேடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் ஜக்தீஷ் யாதவ் என்ற இரண்டு பேரை, நக்சலைட்டுகள் சுட்டுக்கொன்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரசியல் கட்சிக்கு அபராதம்

புதுடில்லி: பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் களமிறங்கும் லோக் இன்சாப் கட்சிக்கு, தபால் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இதையடுத்து, இந்த சின்னத்தை மாற்றி டிராக்டர் சின்னத்தை வழங்கக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி முறையிட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததோடு, அக்கட்சிக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.


தமிழக நிகழ்வுகள்


இடத் தகராறு: 4 பேர் மீது வழக்கு
தொண்டி-எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூரை சேர்ந்தவர்கள் சாமித்துரை 50, கார்த்திக் 29. இருவருக்கும்இடப்பிரச்னை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் கம்பால் தாக்கியதில் சாமித்துரை காயமடைந்தார். சாமித்துரை புகாரில் கார்த்திக் 29, விக்னேஷ் 27, வினோத் 23, கோட்டையா 30, ஆகியோரை எஸ்.பி.பட்டினம் போலீசார் தேடிவருகின்றனர்.

2வது மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

அண்ணா நகர் : அண்ணா நகர் அருகே, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.அண்ணாநகர் கிழக்கு, குமரன் நகர் 27வது தெருவைச் சேர்ந்தவர் நெடுமாறன், 57. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர்,

கருத்து வேறுபாடு காரணமாக, 23 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை மது போதையில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து, தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

1 லட்சம் மதிப்புள்ள வைர நகை மாயம்

பட்டினப்பாக்கம் : பட்டினப்பாக்கத்தில், வீட்டில் இருந்த வைர நகை மாயமானது குறித்து உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆர்.ஏ., புரம், எம்.ஆர்.சி., நகரைச் சேர்ந்தவர், அனுபமதாஸ், 47. இவர், 6ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றார். பின் 9ம் தேதி வீடு திரும்பினார்.அப்போது, வீட்டு பீரோவில் இருந்த, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகை மாயமானது தெரியவந்தது. பல இடங்களிலும் தேடி கிடைக்காததால், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.இதில், வீட்டில் வேலை செய்யும் பெண்கள் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

டாஸ்மாக் ஊழியரின் மண்டை உடைப்பு

வில்லிவாக்கம், : வில்லிவாக்கத்தில் 'டாஸ்மாக்' ஊழியரின் மண்டை உடைத்த போதை ஆசாமி குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

திருத்தணியைச் சேர்ந்தவர் வரமுனி, 48. இவர், வில்லிவாக்கம், தாழாங்கிணறு பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடை எண்: 481ல் விற்பனையாளராக பணிபுரிகிறார்.கடை அருகில் உள்ள பாரில், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த சதீஷ், 30, என்பவர், 11ம் தேதி இரவு மது அருந்திஉள்ளார். போதை தலைக்கேறிய சதீஷ், பாரில் தகராறு செய்து, மது பாட்டிலால் வரமுனியின் தலையில் தாக்கியுள்ளார்.இது குறித்து விசாரித்த வில்லிவாக்கம் போலீசார், சதீஷை நேற்று காலை கைது செய்தனர்.


latest tamil news


கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார் மருமகன் பலி

ராணிப்பேட்டை:கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம், அவளூர் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 52; விவசாயி. இவர் மருமகன் சுபாஷ், 24, சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தன் கிராமத்தில் நெல் அறுவடை பணியை மணி செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால், வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது. நீரை வெளியேற்ற மணியும், சுபாஷும் நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு கிணற்றில் இறங்கி, மோட்டாரை இயக்கியுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கி இருவரும் இறந்தனர்.

காவேரிப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் இரவு 11:00 மணிக்கு இருவரது சடலங்களை மீட்டனர். அவளூர் போலீசார் நடத்திய விசாரணையில், தொடர் மழையால் கிணற்றில் கழிவுநீர் கலந்து விஷவாயுவாக மாறியது தெரிந்தது. இதனால் கிணறு மூடப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X