பொது செய்தி

தமிழ்நாடு

டவுன் பஸ்களில் கூட்டம் இல்லை!

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருப்பூர்: பஸ்களில் நுாறு சதவீத இருக்கையில் பயணிகள் பயணிக்க அரசு அனுமதி வழங்கியும், திருப்பூரில் இயங்கும் டவுன் பஸ்களில் கூட்டமில்லை.கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்ததால், இம்மாதம் 1ம் தேதி முதல் பஸ்களில் நுாறு சதவீத இருக்கையில் பயணிகள் பயணிக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், தீபாவளி, சிறப்பு பஸ்சில் கூட்டம் ஒரு வாரம் இருந்தது.குறிப்பாக, திருப்பூரில் பஸ் ஸ்டாண்ட்

திருப்பூர்: பஸ்களில் நுாறு சதவீத இருக்கையில் பயணிகள் பயணிக்க அரசு அனுமதி வழங்கியும், திருப்பூரில் இயங்கும் டவுன் பஸ்களில் கூட்டமில்லை.கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்ததால், இம்மாதம் 1ம் தேதி முதல் பஸ்களில் நுாறு சதவீத இருக்கையில் பயணிகள் பயணிக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், தீபாவளி, சிறப்பு பஸ்சில் கூட்டம் ஒரு வாரம் இருந்தது.குறிப்பாக, திருப்பூரில் பஸ் ஸ்டாண்ட் விட்டு பஸ் ஸ்டாண்ட் செல்லும் டவுன் பஸ்களில் இருக்கை நிறைந்து பலர் படிக்கட்டில் நின்று பயணம் செய்தனர். இந்நிலையில், நடப்பு வாரம் துவக்கம் முதல் டவுன் பஸ்களில் எதிர்பார்த்த கூட்டமில்லை.காலை மற்றும் மாலை 'பீக்ஹவர்'களில் இருக்கும் கூட்டம் கூட இருப்பதில்லை. டவுன் பஸ்கள், 40 பயணிகளுடன் பயணிப்பதே அரிதாக உள்ளது. பகலில் பத்துக்கும் குறைவான பயணிகளுடன் பஸ்கள் இயங்க வேண்டியுள்ளது.இவ்வளவு நாட்களுக்கு பயணிகளை பஸ்சில் அழைத்து செல்ல கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது, கட்டுப்பாடு நீங்கிய பின்பும் கூட்டம் வராததால் டிரைவர், நடத்துனர்கள் சோர்வடைந்துள்ளனர்.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,' தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற பலர் இன்னமும் திருப்பூர் திரும்பவில்லை. நிறுவனங்கள், 60 முதல், 70 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படுகின்றன. முழு அளவில் பயணிகள் திரும்பாததால், டவுன் பஸ்களில் கூட்டமில்லை. இன்றும், நாளையும் பலர் திருப்பூர் திரும்பினால், வரும் வாரத்தில் பஸ்களில் ஓரளவு கூட்டம் வரும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X