பொது செய்தி

இந்தியா

புடவையில் தத்ரூப ஓவியம்; நெசவாளிக்கு பிரதமர் பாராட்டு

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-புடவையில் தத்ரூபமாக ஓவியம் வரைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளியான பிரேன் குமார் பசக்கிற்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:மேற்கு வங்கத்தின் நாடியாவைச் சேர்ந்த பிரேன் குமார் பசக்,
புடவை, தத்ரூப ஓவியம், நெசவாளி, பிரதமர், பாராட்டு

புதுடில்லி-புடவையில் தத்ரூபமாக ஓவியம் வரைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளியான பிரேன் குமார் பசக்கிற்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:மேற்கு வங்கத்தின் நாடியாவைச் சேர்ந்த பிரேன் குமார் பசக், பாரம்பரியமிக்க நெசவாளி. புடவைகளில் இந்திய வரலாறு மற்றும் கலாசாரங்களை பிரதிபலித்தவர்.பத்ம விருது வாங்கியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது பிரேன் குமார் பசக் எனக்கு அளித்த அன்புப் பரிசு என்றென்றும் என் நினைவில் நிற்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news


பிரேன் குமார் பசக் பரிசளித்த புடவையில், பிரதமர் மோடி, மக்களிடம் உரையாற்றும் காட்சி தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.கடந்த 1970ல் பிரேன் குமார், தன் சகோதரருடன் கோல்கட்டா வீதிகளில் வீடு வீடாகச் சென்று புடவைகளை விற்பனை செய்து வந்தார். இன்று 25 கோடி ரூபாய் விற்றுமுதல் பெற்று வரும் நிறுவனத்தை நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
14-நவ-202118:30:44 IST Report Abuse
Samathuvan ஓ இதுதான் வரலாறா வரலாறு முக்கியம் அமைச்சரே. கேக்க கிகிகி கொக்கொக்க கோ. அப்படியே பெட்ரோலையும் அதே காங்கிரெஸ்ட்டேந்து வாங்கி கொடுத்தா நல்லது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-நவ-202111:14:48 IST Report Abuse
Lion Drsekar இவராவது ஓவியம் வரைந்திருக்கிறார் நமது காஞ்சிபுரம் நெசவாளர்கள் தறியிலேயே மிக அழகாக நெய்கிறார்கள் அவர்களையும் பாராட்டலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
14-நவ-202108:47:08 IST Report Abuse
R.RAMACHANDRAN ,மோடியை புகழ்ந்தால் எதையும் அடையலாம்.அவருடைய உருவம் வரைந்தவருக்கு அரசாங்க விருது.பிழைக்க தெரிந்தவர் விருது பெற்ற நெசவாளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X