சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுந்தது ஒயர்; ரயில்வே கேட் மூடல்

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. நகரின் வடக்கில் இருந்து தெற்கு பகுதிக்கு வருவதற்கான ரயில்வே கேட் இது மட்டுமே. 'பீக்ஹவர்' நேரங்களில், 'கேட்'டை கடந்து வர கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.நேற்று மதியம் 12:00 மணியளவில் 'கேட்' ஒயர் அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால், இருபுறமும் கேட் மூடப்பட்டது. ஊத்துக்குளி ரோட்டில் இருந்து

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. நகரின் வடக்கில் இருந்து தெற்கு பகுதிக்கு வருவதற்கான ரயில்வே கேட் இது மட்டுமே. 'பீக்ஹவர்' நேரங்களில், 'கேட்'டை கடந்து வர கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.நேற்று மதியம் 12:00 மணியளவில் 'கேட்' ஒயர் அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால், இருபுறமும் கேட் மூடப்பட்டது. ஊத்துக்குளி ரோட்டில் இருந்து வந்த வாகனங்களை போலீசார் தடுத்து, அணைக்காடு வழியில் திருப்பி விட்டனர்.எம்.எஸ்., நகரில் இருந்து கேட் நோக்கி வந்த வாகனங்கள் காசிவிஸ்வநாதர்கோவில் வழியாக திருப்பி விடப்பட்டது. பொறியியல் மேலாண்மை குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓயர்களை மாற்றும் பணி நடந்தது. ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த பணி மதியம், 1:30 க்கு நிறைவு பெற்றது; அதன் பின், கேட் திறக்கப்பட்டது. மதிய நேரம் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X