பொது செய்தி

இந்தியா

பாகூர் பகுதியில் டெங்கு பொது மக்கள் அச்சம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
பாகூர் : பாகூர் பகுதியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏம்பலம் தொகுதிக்குக்குட்பட்ட அரங்கனூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால், அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது.இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. அரங்கனுார் பேட்

பாகூர் : பாகூர் பகுதியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏம்பலம் தொகுதிக்குக்குட்பட்ட அரங்கனூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால், அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது.இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. அரங்கனுார் பேட் பகுதியில், கடந்த சில நாட்களாக பலர் காய்ச்சல் மற்றும் சளி, இருமல் போன்ற பாதிப்பால் சிரமப்பட்டு வந்துள்ளனர்.கரிக்கலாம்பாக்கம் சமுதாய மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றதில், அவர்களில் குழந்தைகள் உள்பட பலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதே போல், பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் டெங்கு அச்சத்தில் உள்ளனர். எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள், நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X