கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது

Added : நவ 14, 2021
Share
புவனகிரி : புவனகிரியில் கஞ்சா கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.புவனகிரி கிளாவடிநத்தம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர். அப்போது இரு பைக்குகளில் வந்த 5 பேரை போலீசார் மடக்கி நிறுத்தினர். இதில் ஒருவர் பைக்கில் தப்பிச் சென்றார். மற்ற நால்வரிடம் நடத்திய விசாரணையில் புவனகிரி திரவுபதி அம்மன் கோவில் தெரு முருகன் மகன் சூர்யா, 21; 16 வயது

புவனகிரி : புவனகிரியில் கஞ்சா கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.புவனகிரி கிளாவடிநத்தம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.

அப்போது இரு பைக்குகளில் வந்த 5 பேரை போலீசார் மடக்கி நிறுத்தினர். இதில் ஒருவர் பைக்கில் தப்பிச் சென்றார். மற்ற நால்வரிடம் நடத்திய விசாரணையில் புவனகிரி திரவுபதி அம்மன் கோவில் தெரு முருகன் மகன் சூர்யா, 21; 16 வயது சிறுவன், பெருமாத்துார் கிழக்குத் தெரு அழகர்சாமி மகன் விஜய்,21; மேல்புவனகிரி புதுத்தெரு தண்டபாணி மகன் பாலாஜி,21; என்பதும் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்து பைக், ரூ. 10 ஆயிரம், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். தப்பியோடிய மேல் புவனகிரி ராஜேந்திரன் மகன் அஜித்தை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X