பொது செய்தி

இந்தியா

சங்கரதாஸ் சுவாமி நினைவு நாள்; கலைஞர்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சங்கரதாஸ் சுவாமி 99வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நாட்டுப்புற கலைஞர்கள், நாடக கலைஞர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.புதுச்சேரி நாடக மற்றும் பல்வேறு கலைகளின் கலைஞர்கள் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் 99வது ஆண்டு நினைவஞ்சலி விழா நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, சங்கரதாஸ் சுவாமியின் திருவுருவ படத்துடன், முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர்
 சங்கரதாஸ் சுவாமி நினைவு நாள்;    கலைஞர்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி


புதுச்சேரி : சங்கரதாஸ் சுவாமி 99வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நாட்டுப்புற கலைஞர்கள், நாடக கலைஞர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.புதுச்சேரி நாடக மற்றும் பல்வேறு கலைகளின் கலைஞர்கள் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் 99வது ஆண்டு நினைவஞ்சலி விழா நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சங்கரதாஸ் சுவாமியின் திருவுருவ படத்துடன், முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரி அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம், கரூர் மாவட்ட நாடக நடிகர்கள் முன்னேற்ற சங்கம், தெருக்கு கூத்து கலைஞர்கள் என பல்வேறு அமைப்புகளின் சார்பில் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.காந்தி வீதி வழியாக வந்த நாடக கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், கரகாட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டம், தப்பாட்டம், பம்பை உடுக்கை உள்ளிட்டவை வாசித்து கொண்டு பேரணியாக சென்றனர்.

கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில், அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, நாடக கலைஞர்கள், நாட்டுப் புறக்கலைஞர்கள், பறை இசை கலைஞர்கள், பாரம்பரிய கலை குழுக்கள் உள்ளிட்டடோர் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X