வட்டார கல்வி அலுவலகம் டேமேஜ் ; அச்சத்தில் பணிபுரியும் ஊழியர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வட்டார கல்வி அலுவலகம் 'டேமேஜ்' ; அச்சத்தில் பணிபுரியும் ஊழியர்கள்

Added : நவ 14, 2021
Share
சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.சங்கராபுரம் கடைவீதி ஆற்றுப் பாதை தெருவில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதற்குள் இந்த கட்டடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தற்போது கன மழை பெய்து வரும் நிலையில், மேற்கூரை ஒழுகி

சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.

சங்கராபுரம் கடைவீதி ஆற்றுப் பாதை தெருவில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதற்குள் இந்த கட்டடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தற்போது கன மழை பெய்து வரும் நிலையில், மேற்கூரை ஒழுகி அலுவலகத்தில் வைக்கப்படும் கோப்புகள் நனைந்து பாழாகின்றன. அதுமட்டுமின்றி கட்டடம் மிகவும் வலுவிழந்து இருப்பதால், ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது.பெரும் விபத்து ஏற்படும் முன் பழுதுதடைந்த சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி பழுதான கட்டடத்தை சீரமைக்க கல்வித்துறை அதிகாரிகள், கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X