பொது செய்தி

இந்தியா

நரிக்குறவர், இருளர் மக்களின் வாழ்; கவர்னர் தமிழிசை உறுதி

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி " நரிக்குறவர், இருளர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.கருவடிக்குப்பம் ஏர்போர்ட் பின்புறம் இருளர் மற்றும் நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். மழையால் அவர்கள் வசிக்கும் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டது. இக்குடியிருப்புகளை கவர்னர் தமிழிசை நேற்று ஆய்வு செய்தார்.நரிக்குறவர் குழந்தையை துாக்கி வைத்து கொண்டு,
 நரிக்குறவர், இருளர் மக்களின் வாழ்;   கவர்னர் தமிழிசை  உறுதி


புதுச்சேரி " நரிக்குறவர், இருளர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.கருவடிக்குப்பம் ஏர்போர்ட் பின்புறம் இருளர் மற்றும் நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். மழையால் அவர்கள் வசிக்கும் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டது.

இக்குடியிருப்புகளை கவர்னர் தமிழிசை நேற்று ஆய்வு செய்தார்.நரிக்குறவர் குழந்தையை துாக்கி வைத்து கொண்டு, நரிக்குறவர் மற் றும் இருளர் இன மக்களிடம் நலம் விசாரித்தார். புதுச்சேரி செஞ்சிலுவை சங்கம் மூலம் நிவாரணம் வழங்கினார்.நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, செஞ்சிலுவை சங்க புதுச்சேரி சேர்மன் லட்சுமிபதி, நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யனார், ராமன், ஆயுட்கால உறுப்பினர் ஸ்டீபன் செல்வராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

அப்போது, கவர்னர் தமிழிசை கூறியதாவது: இருளர் மற்றும் நரிக்குறவர் குடியிருப்புகளில் மழைநீர் ஒழுகுவதால், தற்காலிகமாக தார்பாய் வழங்கப்பட்டு உள்ளது. நிரந்தர தீர்வாக குடியிருப்புகள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். இங்குள்ள குழந்தைகள் படிக்க ஏற்பாடு செய்யப் படும். சுயசார்புள்ள மக்களாக மாற்றுவதற்கு, கைத் தொழில், சுய தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்படும்.நரிக்குறவர்கள் குழந்தை கள் கேட்டரிங், நர்சிங் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நரிக்குறவர், இருளர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X