ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 14, 2021
Share
மயிலம் : மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.மயிலத்தில் 24 மணி நேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள கட்டடங்கள் தற்போது பெய்து வரும் கனமழையால் ஒழுகத் துவங்கியுள்ளது.இதனால் மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள், நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.தகவல் அறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் நேற்று

மயிலம் : மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.மயிலத்தில் 24 மணி நேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள கட்டடங்கள் தற்போது பெய்து வரும் கனமழையால் ஒழுகத் துவங்கியுள்ளது.

இதனால் மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள், நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.தகவல் அறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.பின், பொதுப்பணித்துறை அதிகாரியை போன் மூலம் தொடர்புகொண்டு பழுதடைந்த கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து மதிப்பீடு தருமாறு கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று, பழுதான பத்திரப்பதிவு அலுவலக கட்டடத்தையும் பார்வையிட்டார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, டாக்டர் அனந்தலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சித் தலைவர் சிவக்குமார், பா.ம.க., மாநில நிர்வாகி செங்கேணி ஒன்றிய செயலாளர் துரைராஜ், சக்திவேல் இளைஞரணி லோகேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X