சங்கராபரணி - தென்பெண்ணை ஆறுகளை இணைக்க வேண்டும்; தேசிய நதிநீர் இணைப்பு கூட்டத்தில் புதுச்சேரி அரசு வலியுறுத்தல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சங்கராபரணி - தென்பெண்ணை ஆறுகளை இணைக்க வேண்டும்; தேசிய நதிநீர் இணைப்பு கூட்டத்தில் புதுச்சேரி அரசு வலியுறுத்தல்

Added : நவ 14, 2021
Share
புதுச்சேரி : சங்கராபரணி- தென்பெண்ணை ஆறுகளை இணைக்க வேண்டும் என, டில்லியில் நடந்த நதிகள் இணைப்பு கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தேசிய நீர் மேலாண்மை முகமையின் 35வது ஆண்டு பொதுக் கூட்டமும், 19வது நதி நீர் இணைப்புக்கான சிறப்பு கமிட்டி கூட்டமும் நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது.மத்திய நீர் வளத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்,


புதுச்சேரி : சங்கராபரணி- தென்பெண்ணை ஆறுகளை இணைக்க வேண்டும் என, டில்லியில் நடந்த நதிகள் இணைப்பு கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய நீர் மேலாண்மை முகமையின் 35வது ஆண்டு பொதுக் கூட்டமும், 19வது நதி நீர் இணைப்புக்கான சிறப்பு கமிட்டி கூட்டமும் நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது.மத்திய நீர் வளத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மழை காரணமாக முதல்வர் பங்கேற்க முடியவில்லை. அவரது அறிவுறுத்தலின் பேரில், புதுச்சேரி அரசு சார்பில் டில்லியில் உள்ள சிறப்பு ரெசிடென்ட் கமிஷனர் சிங் பங்கேற்று, அரசின் கருத்துக்களை வலியுறுத்தினார்.

கூட்டத்தில், கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்புக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆறுகளின் இணைப்பு தமிழகம் வழியாக செல்லும் போது சங்கராபரணியின் மேல் பகுதி கிளை நதியான வராக நதியையும், தென்பெண்ணை ஆற்றையும் கடந்து செல்கிறது.

அதனால், இவ்விரு ஆறுகளையும் இணைக்க வேண்டும் என்ற கருத்தினை புதுச்சேரி அரசு முன் வைத்தது.கோதாவரி - காவிரி இணைப்பு கால்வாய் சங்கராபரணி மற்றும் தென் பெண்ணையாற்றையும் இணைத்தே செல்வதாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால், இத்திட்டம் நிறைவேறும் போது, இவ்விரு ஆறுகளின் வழியாக புதுச்சேரிக்கு 6,397 ஏக்கர் நிலத்தின் விவசாய தேவைக்கு 2.75 டி.எம்.சி.,யும், குடிநீர் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காக 3 டி.எம்.சி., நீரும் வழங்கிட வேண்டும்.காரைக்காலுக்கு உச்சநீதி மன்ற உத்தரவின்படி 7 டி.எம்.சி., நீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உப்பு நீர் உட்புகுவது அதிகமாகி வருவதால், குடிநீர் மற்றும் பிற தேவைக்காக ஆற்று நீர் தேவை அதிகரிக்கும்.

இதனை கருத்தில் கொண்டு கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றும் போது, புதுச்சேரி அரசின் கருத்தை கேட்ட பின், நீர் பங்கீடு முடிவு செய்ய வேண்டும்.மேலும், தேசிய நீர் மேலாண்மை முகமையை, தேசிய நதி நீர் இணைப்பு ஆணையம் என பெயர் மாற்றும் முடிவுக்கு புதுச்சேரி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X