பொது செய்தி

தமிழ்நாடு

துாத்துக்குடியில் பர்னாந்தீசுக்கு மணிமண்டபம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
சென்னை,:'துாத்துக்குடியில் ராவ்பகதுார் குரூஸ் பர்னாந்தீசுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. துாத்துக்குடி மாநகர மக்களின் நலன் காத்திட, தன்னையே அர்ப்பணித்து கொண்டவர் ராவ்பகதுார் குரூஸ் பர்நாந்தீஸ். இவர், 30 ஆண்டுகள் நகராட்சி கவுன்சிலராகவும், ஐந்து முறை நகராட்சி தலைவராகவும் இருந்தவர். அப்போது, ஜாதி, மத பேதமின்றி அந்தமாவட்ட அடித்தள

சென்னை,:'துாத்துக்குடியில் ராவ்பகதுார் குரூஸ் பர்னாந்தீசுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

துாத்துக்குடி மாநகர மக்களின் நலன் காத்திட, தன்னையே அர்ப்பணித்து கொண்டவர் ராவ்பகதுார் குரூஸ் பர்நாந்தீஸ். இவர், 30 ஆண்டுகள் நகராட்சி கவுன்சிலராகவும், ஐந்து முறை நகராட்சி தலைவராகவும் இருந்தவர். அப்போது, ஜாதி, மத பேதமின்றி அந்தமாவட்ட அடித்தள மக்களின் அடிப்படை கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கி கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமை சந்தை என பல திட்டங்களை செயல்படுத்தினார்.

கடந்த, 1927ல் துாத்துக்குடி மாவட்டம், மிக கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவித்தபோது, நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து, குழாய் வழியே நீர் கொண்டு வரும் திட்டத்தை திறம்பட செயல்படுத்தினார். அத்திட்டம் மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.அவரது பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 'தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அவருக்கு நினைவு மணிமண்டபம் கட்டப்படும்' என்று தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.அதை நிறைவேற்றும் விதமாக, துாத்துக்குடி மாநகரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X