தமிழ்நாடு

தொழிற்பேட்டை திட்டத்தை கைவிடுங்க: அரசிடம் வலியுறுத்தும் விவசாயிகள்

Added : நவ 14, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: 'மேட்டுப்பாளையம், அன்னுார் தாலுகாவில், தொழிற்பேட்டை அமைக்க ஒருபோதும் விட மாட்டோம்' என, விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில், 2 ஊராட்சிகளிலும், அன்னுார் தாலுகாவில், 4 ஊராட்சிகளிலும், 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு

மேட்டுப்பாளையம்: 'மேட்டுப்பாளையம், அன்னுார் தாலுகாவில், தொழிற்பேட்டை அமைக்க ஒருபோதும் விட மாட்டோம்' என, விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில், 2 ஊராட்சிகளிலும், அன்னுார் தாலுகாவில், 4 ஊராட்சிகளிலும், 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நிலம், நீர், பாதுகாப்பு விவசாயிகள் மாநாடு, மேட்டுப்பாளையத்தில் நடத்தப்பட்டது; தமிழக விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் வேணுகோபால் தலைமை வகித்தார்.கூட்டத்தில், 'ஏற்கனவே தொழிற்பேட்டை அமைத்த பகுதிகளில், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபட்டு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விவசாயிகளின் ஒரே தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. விளைநிலங்களை பறிக்கும்போது, விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகள் வளர்க்க முடியாமலும், பாரம்பரிய தொழில் அழியும் நிலை ஏற்படும். இத்திட்டத்தை அரசு கைவிடாத பட்சத்தில், சென்னையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில், கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற டி.எஸ்.பி., வெள்ளிங்கிரி, பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு தலைவர் அரங்கசாமி, பவானி ஆற்று நீர் பாசன சங்க தலைவர் துரைசாமி, சமூக அக்கறை குழு நிர்வாகி சாம்ராஜ், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மகளிரணி பாக்கியமணி உட்பட ஏராளமான விவசாயிகள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X