பொது செய்தி

தமிழ்நாடு

சாதனை புத்தகத்தில் திருமலைக்கு இடம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருப்பதி: உலக சாதனை புத்தகத்தில் திருமலைக்கு சிறப்பு இடம் கிடைத்திருப்பதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலை மற்றும் திருப்பதியில் பல ஏற்பாடுகளை

திருப்பதி: உலக சாதனை புத்தகத்தில் திருமலைக்கு சிறப்பு இடம் கிடைத்திருப்பதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலை மற்றும் திருப்பதியில் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.திருமலையில் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தங்கும் விடுதிகள், அறைகள், முடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி, அன்னதானம் வழங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புழங்குகின்றனர்.ஆயினும் திருமலையில் சுத்தம், சுகாதாரம் தூய்மையாக பேணப்பட்டு வருவதுடன், திருமலையும் பசுமை மாறாமல் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலைப்பாதை வழியாக திருமலையை அடைந்தாலும், அதனால் சுற்று சூழல் சீர்கேடு ஏற்படவில்லை.இவற்றையெல்லாம் கருத்தில் வைத்து பிரிட்டனைச் சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் திருமலைக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது.இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது; இது திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X