மாணவியின் பெற்றோரிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை| Dinamalar

தமிழ்நாடு

மாணவியின் பெற்றோரிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை

Added : நவ 14, 2021
Share
கோவை: கோவையில், பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சடலத்தை வாங்க மறுத்து, மாணவர் அமைப்பும், பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மாணவியின் பெற்றோரை வரவழைத்து, மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் ஆகியோர், நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, 'தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும்

கோவை: கோவையில், பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சடலத்தை வாங்க மறுத்து, மாணவர் அமைப்பும், பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மாணவியின் பெற்றோரை வரவழைத்து, மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் ஆகியோர், நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, 'தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உங்களுக்கு துணை நிற்கும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உடலை பெற்றுச் செல்லுங்கள்,' என்று மாணவியின் பெற்றோரிடம், கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.கலெக்டரிடம் பேசிய மாணவியின் தந்தை 'எங்களுக்கு நீதி கிடைக்கும் என அரசை நம்புகிறோம்,' என்றார். ஆனால், அவர்களுடன் சென்ற எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், 'பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்,' என்றனர்.அதை தொடர்ந்து, உடலை பெறுவது குறித்து எந்த உறுதியும் அளிக்காமல் வெளியே வந்தனர். உக்கடத்திலுள்ள மாணவியின் வீட்டு முன் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இரவு 10:40 மணிக்கு போராட்டத்தை கை விட்ட அவர்கள், காலை 9:00 மணிக்கு மீண்டும் போராட்டம் தொடரும் என அறிவித்து கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X