தி.மு.க., மூத்த எம்.பி.,க்களை சந்திக்க மறுக்கும் அமித் ஷா

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: தி.மு.க.,வின் மூத்த எம்.பி.,க்கள் சிலர் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர்.ஆனால், அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. நிதின் கட்கரி உட்பட மூத்த அமைச்சர்களை இந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்து அமித் ஷாவிடம் பேசி, தங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரும்படி வலியுறுத்தினர். கட்கரி உடனே அமித் ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.ஆனால்
அமித் ஷா, திமுக., எம்.பி.,க்கள், சந்திப்பு, மறுப்பு, அறிக்கை, சமர்பிப்பு

புதுடில்லி: தி.மு.க.,வின் மூத்த எம்.பி.,க்கள் சிலர் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர்.

ஆனால், அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. நிதின் கட்கரி உட்பட மூத்த அமைச்சர்களை இந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்து அமித் ஷாவிடம் பேசி, தங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரும்படி வலியுறுத்தினர். கட்கரி உடனே அமித் ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை அமித் ஷா.சொந்த விஷயங்கள் தொடர்பாக யாரையும் சந்திப்பதை அமித் ஷா விரும்புவதில்லை. தவிர இப்படி தனிப்பட்ட நபர் பிரச்னைகளை தீர்க்க, அரசியல்வாதிகள் சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்குவதில்லையாம். இதை ஒரு கொள்கையாகவே வைத்து உள்ளார் அமித் ஷா.


latest tamil news


தி.மு.க., - எம்.பி.,க்கள் கட்சி மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் என்பது அவருக்கு தெரியும்; அதனால்தான் சந்திக்கவில்லை என்கின்றனர்


பா.ஜ.,வினர். ரகசிய அறிக்கை



தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொடுத்துள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் பயங்கரவாதம் தலை துாக்க வாய்ப்புள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தமிழகத்தில் ஊடுருவத் துவங்கி விட்டது' என சொல்லிஉள்ளதாம். மேலும், தமிழகம் தொடர்பாக மத்திய உள்துறை செயலரும் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில், கொலை வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் விடுதலைப் புலி பற்றிய சில முக்கிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Chennai,இந்தியா
16-நவ-202116:21:53 IST Report Abuse
Karthik வாழும் வல்லபாய் படேல் அமித்சா
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-202119:00:13 IST Report Abuse
ram நல்ல முடிவுதானே.. காரியம் ஆகவேண்டுமானால் காலை பிடிக்கும் கூட்டம் தானே இது..
Rate this:
Cancel
14-நவ-202114:59:37 IST Report Abuse
சம்பத் குமார் 1). எதிர்க்கட்சி எம்பி களை எந்த கட்சியாக இருந்தாலும் சந்திப்பதில் தவறு இல்லை. என்ன விஷயத்திற்காக சந்திக்க வேண்டும் என்பதை ஒரு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று MPகளிடம் கேட்க வேண்டும். நியாயமான கோரிக்கையாக இருந்தால் தாராளமாக சந்திக்கலாம்.2). ஆனால் போட்டோ எடுக்க அனுமதிக்காதீர்கள்.3). பின்னர் அதை போட்டோ ஷூட் செய்து அமித்ஷா எங்களிடம் கை நீட்டி விரல் நீட்டி பேசினார் என்று சொன்னால் சொல்லுவார்கள். கவனம் தேவை. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X