புதுடில்லி:'முல்லைப் பெரியாறு அணை விவகாரமானது, தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அணையில் ஏற்படும் கசிவு குறித்த தகவல்களை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.கேரள மாநிலம் இடுக்கியில் 1895ல் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணையில் நீரைத் தேக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில் அணையில் ஏற்படும் கசிவையும் கவனத்தில் கொள்ளக் கோரி, புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சி.டி.ரவிகுமார் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது: இந்த 126 ஆண்டு அணை விவகாரம் தொடர்பாக, கண்காணிப்பு குழு தொடர்ச்சி 3ம் பக்கம்அளித்துள்ள பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்.இந்த விவகார மானது, ஒரு முறை உத்தரவிடக் கூடியதாக இல்லை; தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
அணையில் ஏற்படும் கசிவுகள் குறித்த தகவல்களை, தேவைப்படும்போது தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, 'முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.
கேரள அரசுக்கு கடிதம்
முல்லைப் பெரியாறு அணையின் ஒரு பகுதியான பேபி அணையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள 15 மரங்களை அகற்றுவதற்கு, தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. முதலில் அனுமதி அளித்த கேரள அரசு, பின் அதை ரத்து செய்தது.
இந்நிலையில் கேரள அரசுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் சஞ்சய் அவஸ்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படாது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கண்காணிப்பு குழுவின் பரிந்துரைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பேபி அணையை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.�அணை பாதுகாப்பாக உள்ளது�உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியுள்ளதாவது:முல்லைப் பெரியாறு அணை, ௧௮௯௫ல் கட்டப்பட்டது. அணைக்கான வாழ்நாள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சிறந்த பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் பணிகளால் அணை பாதுகாப்பாக உள்ளது. தற்போதுள்ள அணையை உடைத்துவிட்டு புதிய அணையை கட்டும் கேரள அரசின் திட்டம், அணையின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்புக்கு எதிரானது. நீரியல், கட்டுமானம் மற்றும் நில அதிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அணை வலுவாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது.
உச்ச நீதிமன்றம்2014ல் நியமித்த மேற்பார்வை குழு, அணையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழுவும் அணை பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பலனை தமிழகம் அனுபவிப்பவதை தடுக்கும் நோக்கில் அணை தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னையை கூறி, மனுக்களை தாக்கல் செய்வது கேரளாவுக்கு வழக்கமாகிவிட்டது. அதனால் புதிய அணையை கட்ட அனுமதி கோரும் கேரள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE