பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரிக்கு இடம்; அமைச்சர் மஸ்தான் ஆய்வு

Added : நவ 14, 2021
Share
Advertisement
செஞ்சி : சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு கலைக்கல்லுாரி அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.செஞ்சி - விழுப்புரம் மெயின்ரோட்டில் சிட்டாம்பூண்டி கிராம எல்லையில் அரசு கலைக் கல்லுாரி அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் மோகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தேர்வு செய்துள்ள இடத்தை ஒரு வார காலத்தில் சுத்தம் செய்து அளந்து அறிக்கையாக தரும்படி
 அரசு கல்லூரிக்கு இடம்;  அமைச்சர் மஸ்தான் ஆய்வு

செஞ்சி : சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு கலைக்கல்லுாரி அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.செஞ்சி - விழுப்புரம் மெயின்ரோட்டில் சிட்டாம்பூண்டி கிராம எல்லையில் அரசு கலைக் கல்லுாரி அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் மோகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

தேர்வு செய்துள்ள இடத்தை ஒரு வார காலத்தில் சுத்தம் செய்து அளந்து அறிக்கையாக தரும்படி தாசில்தாருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். தொடர்ந்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது திண்டிவனம் சப் கலெக்டர் அமித், மாவட்ட திட்ட அலுவலர் சங்கர், தாசில்தார் பழனி, டி.எஸ்.பி., இளங்கோவன், பி.டி.ஓ.,க்கள் ஸ்ரீராமுலு, சுப்ரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், ஆர்.ஐ., கண்ணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X