பொது செய்தி

இந்தியா

வெஸ்ட்மெட் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் கட்டி அகற்றம் 

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, புதுப்பேட்டில் வெஸ்ட்மெட் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 63 வயது பெண்ணுக்கு, இடது மார்பகத்தில் கட்டி இருந்தது.வெஸ்ட்மெட் மருத்துவமனை டாக்டர்கள் அப்பெண்ணை பரிசோதனை செய்தபோது, அது புற்றுநோய் கட்டி என கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து, வெஸ்ட்மெட் மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை

புதுச்சேரி : புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, புதுப்பேட்டில் வெஸ்ட்மெட் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 63 வயது பெண்ணுக்கு, இடது மார்பகத்தில் கட்டி இருந்தது.வெஸ்ட்மெட் மருத்துவமனை டாக்டர்கள் அப்பெண்ணை பரிசோதனை செய்தபோது, அது புற்றுநோய் கட்டி என கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வெஸ்ட்மெட் மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் விக்னேஷ்வரன், மயக்கவியல் நிபுணர் மதன் தலைமையிலான மருத்துவ குழுவினர், 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, மார்பக புற்றுநோய் கட்டியை அகற்றினர்.மருத்துவமனை மேலாண் இயக்குநர் அருள்மணி கூறுகையில், '30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். புற்றுநோய்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் வெஸ்ட்மெட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X